
அதர்வா தற்போது சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் இதயம் முரளி படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களைத் தவிர்த்து டி.என்.ஏ, தணல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த இரு படங்களும் நீண்ட காலமாக தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று அதர்வா பிறந்தாள் காண்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள், திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அவர் நடித்து வரும் படக்குழுவினர்கள் வாழ்த்து போஸ்டரை வெளியிட்டனர். இதில் டி.என்.ஏ. மற்றும் தணல் படக்குழுவினர் ரிலீஸ் அப்டேட்டையும் வாழ்த்து போஸ்டரில் பகிர்ந்துள்ளனர்.
டி.என்.ஏ. படம் ஜூனில் வெளியாகவுள்ளதாகவும் தணல் படம் ஜூலையில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதர்வா நடிப்பில் கடந்த ஆண்டு நிறங்கள் மூன்று என்ற படம் வெளியானது. பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த சூழலில் இந்தாண்டு அடுத்தடுத்து அவரது படங்கள் ரிலீஸாவதால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.