Skip to main content

சிம்புவுடன் மல்லுக்கட்டிய இயக்குநர் படத்தில் 5 நாயகிகளா..?

Published on 31/03/2020 | Edited on 31/03/2020


தேவி படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இரண்டாவது ரவுண்டு வந்துகொண்டிருக்கும் நடிகர் பிரபுதேவா.அவரது நடிப்பில் அடுத்ததாகப் "பொன் மாணிக்கவேல், யங் மங் சங்", ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன. இதில் பொன் மாணிக்கவேல் படம் பிரபுதேவாவின் 50வது படமாகும்.

 

bfg



மேலும் இவர் தேள், பஹீரா ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகும் பஹீரா படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்றால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் மொத்தம் 5 நாயகிகள் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுவரை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் நடித்த காயத்ரியும், 'அனேகன்' படத்தில் நடித்த அமைராவும் வரும் காட்சிகளைப் படமாக்கிவிட்டனர். மேலும் ரம்யா நம்பீசன் மற்றும் சஞ்சிதா செட்டி ஆகியோரின் காட்சிகள் படமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் ஒரு கதாநாயகி யார் என்று முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை கோவா மற்றும் இலங்கையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு -  201 கலைஞர்கள்!

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2018 வரையிலான 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

v

 

இயல்பிரிவில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்புஆறுமுகம், சிவசங்கரி ஆகியோருக்கு பாரதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இசைப்பிரிவில் எஸ்.ஞானகி, சரோஜா, லலிதா, டிவி.கோபாலகிருஷ்ணனுக்கு  எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வைஜெயந்தி மாலா பாலி, விபி.தனஞ்செயன், சிவி.சந்திரகேகருக்கு பால சரஸ்வதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.


திரைப்படத்துறையில், நடிகர்கள் பிரபுதேவா, கார்த்தி, விஜய்சேதுபதி, சந்தானம், விஜய் ஆண்டனி, பிரசன்னா, ஸ்ரீகாந்த், சூரி, பொன்வண்ணன்,  பாண்டு, சிங்கமுத்து, இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா உள்ளிட்டோர் கலைமாமணி விருதுகள் பெறுகிறார்கள்.

Next Story

'அண்டாவுல தான் ஊத்த சொன்னேன்...என் மேல இல்லை' - சிம்பு திடீர் பல்டி !

Published on 28/01/2019 | Edited on 28/01/2019
simbu

 

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் வரும் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு 'கட்அவுட், பேனர் எல்லாம் வைக்க வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து மீண்டும் 'இதுவரைக்கும் நீங்கள் வைக்காத அளவுக்கு எனக்கு பிளெக்ஸ் வையுங்கள், பேனர் வையுங்கள். கட்அவுட் வையுங்கள். பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள்' என ரசிகர்களுக்கு கட்டளையிட்டு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது சிம்பு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில்...

 

 

"கடந்த ஒரு வருடத்திற்கு முன் என்னுடைய ரசிகர் ஒருவர் கட்அவுட் இறந்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணாமாக நான் என் படத்திற்கு கட்அவுட், பேனர் எல்லாம் வைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால் இவருக்கு எல்லாம் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா? இவர் இதை விளம்பரத்துக்காகத் தான் சொல்கிறார்கள் என எனக்கெதிராக விமர்சனங்கள் வந்தது. அதனால் நான் கட்அவுட் வையுங்கள். பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள் என கிண்டலாக சொன்னேன். நான் இப்படி சொன்னது யார் மனதையாவது புண் படும்படியாக இருந்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள் என்று சொன்னேனே தவிர எனக்கு அபிஷேகம் செய்யுங்கள் என நான் சொல்லவில்லை. நான் மாற்றி மாற்றி பேசுகிறேன் என நினைக்கலாம். நான் மாற்றி பேசவில்லை அனைவரும் மாற வேண்டும் என்று தான் பேசுகிறேன்" என்றார்.