Skip to main content

காளியை வணங்கிய கொள்ளைக் கூட்டம்; யார் இந்த ‘தக்ஸ்’? - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 43

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
thilagavathi-ips-rtd-thadayam-43

பல்வேறு கொலை குற்றச் சம்பவங்களை ‘தடயம்’ என்னும் தொடரின் வழியே தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்கி வருகிறார். அந்த வகையில் இன்று பிரபலமாகவும், சர்வ சாதாரணமாகவும் சோசியல் மீடியாவில் பயன்படுத்தக்கூடிய 'தக் லைப்' என்ற சொல், ஒரு காலத்தில் இந்தியாவையே உலுக்கிய நிஜ தக்கீ என்ற கொலை, கொள்ளை கூட்டத்தின் சுவாரஸ்யமான வரலாற்று வழக்கின் பின்னணி பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

தக்ஸ் என்று அழைக்கப்பட்ட கொள்ளைக் கூட்டம், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போதே இருந்து வருகிறது. 'தக்' என்பதின் அர்த்தமாக தந்திரமான, மோசடி செய்பவர் என்று கூறலாம். இந்த தக்கீஸ் என்ற கொள்ளைக் கூட்டம் அருமையாக நிர்வகிக்கப்பட்டு கிட்டத்தட்ட 600 வருடங்கள் ஆட்சியர்கள் கையில் பிடிபடாமல் இருந்து வந்தது. இவர்களின் கூட்டத்தில் இருக்கும் எந்த நபருக்கும் மதம், சாதி என்ற பிரிவினை இருக்காது, 'தக்' என்ற ஒரு அடையாளம் மட்டுமே. முஸ்லீம் மதத்தவர் இருந்தாலும், இந்த கூட்டம் காளி மாதாவையே வணங்கி உயிர்ப்பலியை கொடுக்கும் பழக்கம் உடையவர்கள். இவர்கள் பெரும்பாலும் இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்தனர்.

இவர்களுக்கு என்று பிரத்யேக சங்கேத பாஷைகளும், வித்தியாசமான வாழ்க்கை முறைகளும் உண்டு. தான் செய்யும் தொழில் பற்றி சொந்தம் உட்பட யாரிடமும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழுபவர்கள். இவர்கள், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள், இசை, நடன கலைஞர்கள், சீக்கியர்கள் என ஒரு பத்து வகை பிரிவினருக்குள் வருபவரை கொல்லக்கூடாது என்று வினோத கொள்கையை பின்பற்றினர். இவர்கள் மாட்டு வண்டிகளிலும், கழுதையிலும், நடந்தும் யாத்திரைகளுக்கு பயணம் செய்யும் மக்களை குறிவைத்து அவர்களுடன் ஒருவராக கலந்துகொண்டு, மேலும் 'தக்கீஸ்' கூட்டத்திலிருந்து தப்பிக்க அவர்களுடனே சேர்ந்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பேசி ஏமாற்றி கலந்துவிடுவர். இவர்களுக்கென்று பெரிய ஆயுதம் எதுவும் கிடையாது. ஒரு மஞ்சள் தலைப்பாகைக்குள் ஒரே ஒரு காயின் போன்றவற்றை வைத்து தலையில் கட்டி இருப்பர். கூட்டத்தில் முக்கியமான ஒரு நபரை பயணிகள் சோர்வடையும் நேரமாகப் பார்த்து அந்தி நேரத்தில் தனியாகப் பிரித்து அந்நபரைத் தாக்கி தலைப்பாகையினாலே கழுத்தை நெரித்து அந்த காயினால் வெட்டிச் சத்தமின்றி கொன்று விடுவர்.

இவர்கள் தங்களுக்குள் மூன்று பிரிவினராக - உளவு பார்ப்பவர், குழி வெட்டுபவர், கழுத்தை நெறிப்பவர்கள் என்று பிரித்து இருந்தனர். கழுத்தை சிறந்த முறையில் நெறிப்பவனே 'சமேதார்' என்று கூட்டத்தில் தலைவனாக நியமிக்கப்படுவான். கொன்ற சடலங்களை குழி வெட்டி ஏற்பாடாக இருக்கும் இடத்தில் போட்டுவிடுவர். பயணித்த கூட்டம் ஏற்றி வந்த வண்டியையும் ஏரிக்குள் தள்ளி, குழந்தைகள் எடுக்கப்பட்டால் அதனை தங்கள் 'தக்' கூட்டத்தில் சேர்த்துக் கொள்வர். இவர்களினால் 14-18ம் நூற்றாண்டுகளில் வருடத்திற்கு 30,000 முதல் 40,000 வரை பயணிகள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

பின்னர் ஈஸ்ட் இந்தியா கம்பெனி வந்தவுடன், இவர்கள் மீது வந்த புகார்கள் அன்றைய இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் வில்லியம் பென்டிங்க் பிரபு என்பவர், சிறப்பு விசாரணைக்காக சிப்பாய் வில்லியம் ஹென்றி ஸ்லீமன் என்பவரை தக்கீஸ் எனப்படும் வழிப்பறி கொள்ளைக் கூட்டத்தை அடக்க நியமிக்கிறார். ஸ்லீமன் இவர்களைத் தேட தனி அமைப்பை அமைக்கிறார். இவர் முதல் கட்டமாக, தக்கீஸ் அதிகமாக நடமாடும் இடங்களில் புழங்கும் 6,7 மொழிகளைக் கற்றுக்கொள்கிறார். அடுத்ததாக காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட பயணிகளின் கொலை செய்யப்பட்ட இடத்தை அறிந்து சடலங்களை எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்து அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்று அறிந்து கொள்கிறார். அடுத்ததாக தக்கீஸின் குடும்ப உறுப்பினர்களைக் கண்டுபிடித்து அவர்களின் மறு வாழ்விற்கு வழி செய்து கொடுக்கிறார். அவர்களின் குழந்தைகளுக்கு ஜமால்பூர் என்ற ஊரில் ஒரு பள்ளிக்கூடம் அமைத்தும், கைத்தொழில் செய்ய வழி அமைத்துக் கொடுத்தும், அவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறார்.

மேலும் பிடிப்பட்ட ஓரிரு தக்கீஸ்களை வைத்து அவர்களின் தலைமுறை பின்னணி கேட்டு அறிகிறார். அதன்படி அப்போது இயங்கி வந்தது ஏழாவது தலைமுறை. இவர்களின் ஆரம்பம், ராஜஸ்தானில் மியா என்கிற கோட்டைப் பகுதியில் ஆட்சி செய்த மேவாட் மன்னர்களுக்கு பூசாரிகளாக இருந்து வந்த ஒரு குடும்பத்தின் நபரே இந்த தக்கீஸ் கூட்டம் உருவாக காரணம். காலப்போக்கில், இவர்கள் 500 குடும்பமாக பெருகி, கிட்டத்தட்ட 32 கிராமங்களில் வசிக்கின்றனர். அந்த கிராமத்தின் ஜமீன்தார்களுக்கு, இவர்கள் கொள்ளையடித்து, வேட்டையாடி தரும் பொருள்களில் சிறிய பங்கு சன்மானமாக கொடுக்கப்படுகிறது. இது வீட்டில் இருக்கும் தன் குடும்பத்தை பேணிக் காக்க இது அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. மேலும் வரலாற்றுக் குறிப்பில், சிந்திய மன்னர்கள் இவர்களிடம் வருடத்திற்கு எட்டணா கப்பம் கொண்டு இவர்களின் குடும்பத்தை பார்த்துக் கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறது.

இந்த தக்கீஸ் என்பவர்களைப் பிடிக்க முக்கிய மைல்கல்லாக ஸ்லீமனுக்கு அமைந்தது, இந்த கூட்டத்தின் முக்கிய தலைவனான பெரங்கியா என்ற ஒருவனை பிடிக்க முயல்கின்றனர். எளிதில் மாட்டாத அவனை மிகவும் சிரமப்பட்டு ஜான்சியில் பிடிக்கின்றனர். குறிப்பாக இவனைப் பிடிக்க, ஹைதராபாத்தின் அன்றைய நிசாமும் படை வீரர்களை வைத்து தேடி இருக்கிறார். ஸ்லீமன் மேலும் 1000 தக்கீஸ்களை பெரங்கியா கொடுத்த தகவலின் பேரில் கைது செய்கின்றனர். கூடுதலாக பெரங்கியாவிற்கும் மேலே பேராம் என்பவன் தலைவனாக இருப்பது தெரிய வருகிறது. அவனையும் பிடித்து அவனோடு சேர்த்து 40 கூட்டாளிகளை ஜமால்பூர் அருகில் ஒரே மரத்தில் தூக்கிலிட்டனர். 1830ல் இந்த ஆபரேஷனை ஆரம்பித்து 1835ல் முக்கிய நபர்களைப் பிடிக்கின்றனர். 1840க்குள் தக்கீஸ்களே இல்லை என்று அறிவிக்கின்றனர். இதுபோல கொள்ளைக் கூட்டம் தொடரக்கூடும் என்றுதான் பின்னாளில் கிரிமினல் ட்ரைப்ஸ் ஆக்ட் என்று கொண்டு வருகின்றனர். 1871வது வருடம் அமல்படுத்தவும் படுகிறது.

அதன்பிறகு, இதுபோல நடப்பில் இருந்த 200 இனக் குழுக்கள் இந்த ஆக்ட் கீழ், குற்றவாளிகளாக கருதப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. அந்த சட்டத்தின் படி, அக்குடும்பத்தில் பிறந்தவர்களையும், அவர்களை சேர்ந்தவர்களையும் பிறவி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கூட சில சாதி, இனத்தை சேர்த்தவர்களையும் அப்படி அறிவித்தார்கள். இந்த பிறவி குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரமே மிகவும் பாதிக்கப்பட்டது. இவர்கள் மறுவாழ்வுக்கு வேறொரு தொழில்கள் செய்து பிழைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சுதந்திரத்தின் போது இதுபோல பிறவி குற்றவாளி என்று அவர்களை ஒதுக்கி முடக்கும் விதத்தை பா. ஜீவானந்தம் என்ற கம்யூனிஸ்ட் தலைவர், முத்துராமலிங்கம் போன்றோர் எதிர்த்தனர்.

மைக் டச் என்பவர் தன்னுடைய ஆராய்ச்சி புத்தகத்தில், தக்ஸ் அழிவின் பிறகு மிச்சம் இருக்கும் 5000 பேரில், தோராயமாக ஐநூறு பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்தும், சுமார் மூவாயிரம் பேரை சிறையில் அடைத்தும், மீதம் ஒரு ஆயிரம் பேரை கடுமையான தண்டனை கொடுத்து தூர தேசங்களுக்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும் 'கன்பஷன்ஸ் ஆப் எ தக்’ என்று , ஸ்லீமன் போல ஹைதராபாத்தின் நிசாமால் நியமிக்கப்பட்ட பிலிப்ஸ் மெடோஸ் என்பவர் 19ம் நூற்றாண்டில் எழுதி மிகப் பிரபலமாக விற்கப்பட்ட அந்த நூலின் அடிப்படையிலேயே நிறைய திரைப்படங்கள் வந்திருக்கிறது. இந்த 'தக்ஸ்' என்ற வார்த்தை பிரபலப்பட்டு பின்னாளில் ஆக்ஸ்போர்ட டிக்ஷனரிலேயே இடம்பெறும் அளவுக்கு ஆனது. பல்வேறு வெளிநாடுகளில் அண்டர்வேர்ல்டு குற்றவாளி கூட்டமும் தங்களை 'தக்ஸ்' என்றே அடையாளப்படுத்துகின்றனர். 

Next Story

ஏரிக்குள் கிடந்த மர்ம பீப்பாய்; வருடங்கள் கடந்து தெரிய வந்த உண்மை - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 53

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Thilagavathi Ips rtd thadayam 53

ஒரு சிறிய ஸ்குரூ வைத்து ஒரு பெண்ணின் கொலை கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

கொச்சின் பனங்காடு ஏரியில் நெடுநாட்களாக காலமாக ஒரு நீல நிற பீப்பாய் ஒன்று சந்தேகப்படும்படி மிதந்து கொண்டு இருக்கிறது. அந்த ஏரியை சுத்தம் செய்யும் போது தான் அந்த பீப்பாய் எடுத்து கரையில் ஓரமாக வைக்கின்றனர். கரையில் வைத்தவுடன் அதில் துர்நாற்றம் வீசுகிறது. அதை கவனித்த மக்கள் அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்திலிருந்து வந்து அதிகாரிகள் அதை உடைத்து பார்த்ததில் உள்ளே கான்கிரீட் உடன் கொஞ்சம் எலும்புகளோடு ஒரு ஆணி போல ‘மல்லியோலர் திருகு’, அதனுடன்  ஒரு வாஷர், மற்றும் ஒன்றரை அடி நீளமுள்ள முடி கிடைக்கிறது. மேலும் மூன்று  500 ரூபாய் நோட்டுகளும் ஒரு நூறு ரூபாய் தாளும் பண மதிப்பிழப்பு நடப்பதற்கு முன்பு பயன்படுத்திய பழைய தாள்களாக இருக்கிறது. எனவே இது 2016க்கு முன்பு நடந்ததாக இருக்கலாம் என்று உறுதி செய்யபடுகிறது.

ஒரு சர்ஜனை கூப்பிட்டு அவரிடம் கருத்து கேட்டபோது, தாடை எலும்புகளை பார்க்கும் போது இது ஒரு பெண்ணுடலாக தான் இருக்கும் என்றும்  உயரம் குறைவானதாக 20 வயதுக்கு உட்பட்ட பெண்ணினுடைய உடலாக இருக்கலாம் என்று சொல்கிறார். கொலைக் குற்றமாக ஐ. பி. சி 302 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதற்கென்று ஒரு தனி படை அமைத்து விசாரிக்கின்றனர்.

அங்கிருந்து கடம்பு சேரியில் இருக்கும் மருத்துவக் கல்லூரிக்கு  கிடைத்த எல்லா பொருள்களையும் கொடுத்து எலும்புகளை வைத்து ஆராய்ச்சி செய்த போது  கணுக்காலில் அறுவை சிகிச்சை ஏற்படும் போது பயன்படுத்தக்கூடியது தான் இந்த  மல்லியோலார்  திருகு என்றும் அதில் PITKAR  என்று பொரிக்கப்பட்டிருந்ததை வைத்து அதை தயாரித்த நிறுவனம் மற்றும் பேட்ச் நம்பர் வைத்து விசாரித்ததில் அந்த பேட்ச்சில் மொத்தம் 161 திருகில் ஆறு மட்டுமே கேரளாவுக்கு கொடுத்திருக்கின்றனர் என்று தெரிய வந்தது.

அந்த ஆறு திருகுகள் எந்த மருத்துவமனைக்கு அளித்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து அந்த மருத்துவமனைகளுக்கு சென்று ரெக்கார்ட்ஸ் விசாரிக்கப்பட்டது. கிடைத்த 6.5 சென்டிமீட்டர் நீளமுள்ள இந்த ஸ்க்ரூ சகுந்தலா என்ற 60 வயது பெண்மணிக்கு பொருத்தப்பட்டு இருக்கிறது என்று கண்டுபிடிக்கின்றனர். எனவே ஹாஸ்ப்பிட்டல் ரெக்கார்ட்படி தொடர்பு கொள்ள வேண்டிய நபராக உதயம் பேரூரில்  இருக்கும் தனது மகள் அஷ்மதி பெயரை கொடுத்திருக்கிறார் என்று அறியப்பட்டு அஷ்வதியிடம் விசாரிக்கின்றனர்.

அவள் மூலம் போலீஸ் அந்த சகுந்தலா வாழ்க்கை பற்றி சில தகவல்களை பெறுகின்றனர். அவர் உதயம் பேரூர் என்ற ஊரில் பிறந்து ஆறு மாத குழந்தையாக இருந்த போது சரஸ்வதி அம்மா என்ற ஒரு பெண் தத்தெடுத்து வளர்க்கிறார். அவரை வளர்த்து தாமோதரன் என்று ஒரு முன்னணி கட்சியில் மிகுந்த ஈடுபாடு உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், கட்சி தொடர்பாக ஒரு முறை இவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக ஜெயிலுக்கு சென்று விடுகிறார். இவருடைய மகனும் விபத்தாகி பின்னர் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கிறான். அஸ்வதியும் வீட்டை விட்டு ஓடி செல்கிறார். யாரும் துணை இல்லாததால் தன் வாழ்க்கை வருமானத்திற்காக ஸ்கூட்டியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வருகிறார். அப்படி ஸ்கூட்டியில் செல்லும்போது தான் ஒரு முறை விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சையின் போது அந்த திருகு  வைக்கப்படுகிறது.

அது செப்டம்பர் 15ஆம் தேதி 2016 அன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அதன் பின்னர் தான் மகள் வீட்டிற்கு சென்று தங்கியபோது சின்னம்மை போட்டு இருக்கிறது. அதனால் அஸ்வதி தன்  குழந்தைகளை கூட்டிக்கொண்டு லாட்ஜ் எடுத்து தங்குகிறாள். பின்னர்  26 ஆம் வீட்டிற்கு வந்தபோது தனது அம்மா அங்கு இல்லை என்று சஜித் என்பவனிடம் கேட்டபோது அவர் பாதுகாப்பாக பத்திரமாக இருக்கிறார் அவரை தேடாதே என்று சொல்லி விடுகிறான். இதுவரை தான் போலீஸ் விசாரணையின் போது கண்டுபிடிக்கின்றனர். அடுத்த கட்ட விசாரணைக்காக சஜித் என்பவரை சந்தேகித்து விசாரிக்கும் போது திருப்பணித்துறை என்ற ஊரில் சரிகா என்ற ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி வாழ்ந்து வருகிறார் என்று கண்டுபிடிக்கின்றனர். அங்கு சரிகாவை விசாரித்த போது தனது அம்மாவிற்கு இரண்டாவது திருமணத்தின் போது பிறந்த குழந்தை தான் சரிகா என்றும், சஜித் என்பவரை 18 வயதில் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் எட்டு வருடங்களாகியும் குழந்தை இல்லை என்பதால் சிகிச்சை எடுத்து வருவதாக சொல்கிறார். மேலும் தன் கணவன் அஸ்வதி என்ற பெண்ணை அறிமுகம் செய்து அவள் அனாதையாக இருப்பதாகவும் தான் தான் அந்த பெண்ணிற்கும் குழந்தைகளுக்கும் பண உதவி செய்வதாக சொன்னார் என்று குறிப்பிடுகிறார்..

கிடைத்திருக்கும் தகவலை வைத்து மேற்கொண்டு விசாரித்ததில் சகுந்தலா மகள் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தபோது சஜித் பற்றி உண்மையை தெரிந்து கொள்கிறாள். அவனிடம் கண்டித்து திருமணமானது பற்றி தன் பெண்ணிடம் சொல்லி சொல்லி விடுவேன் என்று கண்டித்து அவனை முந்தைய  மனைவியிடமே போய் வாழுமாறு சொல்லி பார்க்கிறார். ஆனால் அதைக் கேட்காததால் சஜித் சகுந்தலா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொன்று தனக்கு தெரிந்த நான்கு நண்பர்களை வைத்து ஒரு பீப்பாயில் கான்கிரீட் நிரப்பி கொன்ற எலும்புகளை போட்டு அப்படியே செங்குத்தாக நிற்கிற நிலையில் நகர்த்திக் கொண்டு சென்று ஏரியில் போட்டு விடுகிறார். இதன் பின்னர் உண்மையை போலீஸ் கண்டுபிடித்து தன்னை போலீஸ் தேடுகிறது என்று தெரிந்தவுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறான்

Next Story

பெண்களை குறி வைத்து கொன்ற சயனைட் மல்லிகா - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 52

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
thilagavathi ips rtd thadayam 52

பெண்களை ஏமாற்றி சடலங்களை குவித்த ‘சைனைட் மல்லிகா’ வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

அடுத்ததாக ஆறு வருடங்கள் கழித்து திட்டமிட்டு குறையோடு வரும் பெண்கள் அதிகமாக சேருமிடமான மருத்துவமனை, கோவில்கள் என்று குறிவைத்து தன் கொலைகளை செய்கிறாள். இப்படியாக கெம்பம்மா மேலும் 50 வயதான சாத்தனூரைச் சேர்ந்த எலிசபெத்  தன் பேத்தியைக் கண்டுபிடிக்க வர அவளை கோவில் வளாக அறைக்கு அழைத்துச் சென்று பலகாரத்தில் சைனைட் கலந்து குடுத்து கொல்கிறாள். மருத்துவமனையில் சந்தித்த 60 வயதான யசோதாம்மா சித்தகங்கா மடத்தில் கொல்லப்பட்டார். இப்படிதான் முனியம்மா என்பவர் யடியூர் சித்தாலங்கேஷ்வர் கோயிலில் 15.12.2007 அன்று கொல்லப்பட்டார். 60 வயதான பில்லாமா, ஹெப்பல் கோவிலுக்கு ஒரு புதிய வளைவை நிறுவ ஆசைப்பட்டதை அறிந்து அவருக்கு நிதியுதவி செய்வதாக கெம்பம்மா உறுதி அளித்து, அவரையும் தன் வழக்கமான முறையில் மத்தூர் வியாத்யநாதபுரத்தில் கொல்கிறாள். ஒரு 30 வயதுடைய பெண் தனக்கு ஆண் குழந்தை இல்லாததால் வேண்ட அவளையும் தன் இரையாக்கி கொல்கிறாள்

இப்படி நிறைய கொலைகள் ஆங்காங்கு ஆதாரமில்லாமல் நிறைய பிணங்கள் கிடைக்கின்றன. மேலும் 2006ல் ரேணுகா என்ற பெண் காணாமல் போய் சடலம் கிடைக்கிறது. கெம்பம்மா சமையற்காரராக வேலை செய்த இடத்தில் மணியும் வேலை செய்து வந்தார். கெம்பம்மா மணியின் சகோதரி ரேணுகாவுடன் பேசி பழகி அவளுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற குறை இருப்பதை தெரிந்து கொண்டு கெம்பம்மா கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு யாத்ரீக மையத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினால் தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்கிறாள். அதேபோல வரவழைத்து போலி பூஜை நடத்தி கொன்று விடுகிறாள்.  அப்போது   வேலைக்கு சென்றிருந்த ரேணுகாவின் கணவர் துபாயில் இருந்து வருகிறார். ஏற்கெனவே பிரபலமான முறையில் நிறைய கோவில் தொடர்பான கொலைகள் நிறைய பார்த்ததால் கணவர் போலீசில் புகார் அளிக்கிறார். ஏற்கெனவே நிறைய புகார்கள் இதுபோல பதிந்ததால் இந்த கொலையும் சேர்த்து மொத்தம் எட்டு கொலைகள் கெம்பம்மா  மீது பதியப்படுகிறது.

கோர்ட் விசாரணையின் போது திறமையான வக்கீலின்  வாதாடலால் எலிசபெத் வழக்கில் கிடைத்த எல்லா பத்து சாட்சியையும் உறுதியாக இல்லை என்று கெம்பம்மாவை அதிலிருந்து விலக்குகிறார். ஆனால் நாகவேணி கொலையின் போது மட்டும் அறை ரிஜிஸ்டர் செய்யும்போது ஒரே கையெழுத்தினால் தொடர்புபடுத்தி அதில் மாட்டி கொள்கிறார். இதில் முனியம்மா வழக்கின் மீது கிடைத்த ஆதாரம்  வைத்து அது மட்டும் முக்கிய வழக்காக கருதப்படுகிறது.

ஆனாலும் அந்த வழக்கில் கெம்பம்மா பக்கமுள்ள வக்கீல் போலீசாரிடம் இவர் தான் குற்றவாளி என்றால் பேருந்து நிலையத்தில் இவரை பிடித்த போதே அங்கிருந்த ஐந்து சாட்சியங்களை வைத்து அப்பொழுதே அவரிடம் கைப்பற்றப்பட்டதை வழக்கு பதிவு செய்திருக்கலாமே. ஆனால் அப்படி செய்யாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் தான் சைனைட் கொப்பி வாங்கி, போலி சாவி, ரசீது என்று எல்லாவற்றையும் வாங்கி நீங்கள் செட் செய்திருக்கிறீர்கள் என்று மாத்தி விடுகிறார். அப்படி செய்தும் சாட்சியத்தின் போது அடகு கடை ரசீது வைத்து அந்த கடையின் உரிமையாளரை அழைத்து சாட்சியாக விசாரிக்கிறார்கள். அவரும் இந்த அம்மா காட்டி கொடுத்து அவர் வைத்த நகைகளையும் சொல்லி விடுகிறார். மேலும் அவருக்கு தான் தான் ரூம் அளித்தேன் என்று அந்த கோயில் வளாகத்தில் சாவி கொடுத்தவரும் சாட்சி சொல்லிவிடுகிறார். இப்படியாக கிடைத்த ஆதாரத்தை வைத்து இந்தியாவில் முதல் முறையாக மரண தண்டனை பெற்ற முதல் பெண் குற்றவாளியாகிறார் சயனைடு மல்லிகா. மொத்தம் எட்டு வழக்கில் எலிசபெத் கேஸ் தவிர பாக்கி ஏழு வழக்குகளில் இரண்டு வழக்குகள் தூக்கு தண்டனையாக கொடுக்கப்பட்டு மீதம் ஆயுள் தண்டனையாக கொடுக்கப்பட்டு பின்னர் எல்லா வழக்குகளுக்கும் சேர்த்து ஆயுள் தண்டனை கொடுத்து விட்டனர்.

இத்தனை கொலைகளுக்கும் இருக்கும் அந்த பெண்ணின் ஒரே பின்னணி தன் வறுமையின் காரணமாக செய்ததுதான். முதலில் ஆறு வருடங்கள் செய்யாமல் இருந்தாலும் தன் பெண்களை வேற இடத்தில் திருமணம் செய்துகொடுத்த பின்னர் டாக்ஸி டிரைவராக இருக்கும் தன் மகனுக்கு சொந்தமாக ஒரு டாக்ஸி வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் 2006ல் இருந்து இத்தனை கொலைகள் அவர் செய்து இருக்கிறார்.  எனவே பொதுமக்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தன் குறைகளை கூறுவது தன் அந்தரங்க விஷயங்களை பகிர்வது என்பதை தவிர்க்க வேண்டும். மேலும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு கூட தெரியாமல் அவர்களை அனுப்பிவிட்டு வேறு ஒரு நபரை தன் வீட்டிற்குள் அனுமதித்து அவர் சொல்வது போல செய்தால், இது போல தான் உயிர் போகும். அசம்பாவிதம் நடக்கும். எவ்வளவு மன உருக பேசினாலும் சுய பாதுகாப்பை மக்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.