Skip to main content

வருகிறார் குட்டி விராட் கோலி.... அனுஷ்கா ஷர்மா பகிர்ந்த தகவல்!!! 

Published on 27/08/2020 | Edited on 27/08/2020

 

virat anushka sharma

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. தற்போது அனுஷ்கா ஷர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர், விராட்கோலி, அனுஷ்கா ஷர்மா இருவரும் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து இனி நாங்கள் மூன்று பேர். 2021 ஜனவரியில் குழந்தை பிறக்க இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவரது ட்விட் இணையத்தில் நிறைய பேரால் பகிரப்பட்டு வருகிறது.  

 

 

 

Next Story

விராட் கோலிக்கு ஆபத்து?; பயங்கரவாதிகள் மிரட்டலால் பரபரப்பு!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
Danger for Virat Kohli due to threats

ஐபிஎல் 2024இன் 65ஆவது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் அடித்தது. அதனை தொடர்ந்து, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த அபார வெற்றி மூலம், பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

இதனையடுத்து, முதல் தகுதி சுற்று போட்டி நேற்று (21-05-24) நடைபெற்றது. இதில், ஹைதராபாத் அணியை தோற்கடித்து நேரடியாக இறுதிச்சுற்றுக்கு கொல்கத்தா அணி தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று (22-05-24) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கும், பெங்களூர் அணிக்கும் போட்டி நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளில் வெற்றி பெறும் அணி, அடுத்ததாக ஹைதராபாத் அணியோடு மோதவிருக்கிறது.

இத்தகைய சூழலில், பெங்களூர் அணி வீரர் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால், இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருந்த பயிற்சியை பெங்களூர் அணி ரத்து செய்துள்ளது. மேலும், இந்த மிரட்டல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக, கடந்த 20ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகள் 4 பேரை குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

6 நிமிடங்களில் 50 ரன்கள்! அதிசயிக்க வைத்த ஆர்.சி.பி.வீரர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
50 runs in six minutes! Amazing RCB player will jacks

ஆறு நிமிடங்களில் 50 ரன்கள் அடித்து ஆர்.சி.பி.வீரர் ஒருவர் அதிரடியில் அதிசயிக்க வைத்துள்ளது சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024இன் 45ஆவது லீக் ஆட்டம் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றிய போட்டி முத்ற்கொண்ட், இனி ஆடும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பில் கொஞ்சமாவது நிலைத்திருக்க முடியும் என்பதால் பெங்களூரு அணிக்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. குஜராத் அணியும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பு வலுப்பெறும் என்பதால் ஆரம்பம் முதலே விறுவிறுப்பு தொடங்கியது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. சஹா, கில் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த தமிழ்நாட்டு வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் பொறுப்பான அதே நேரத்தில் அதிரடியான பேட்டிங்கால் குஜராத் அணி சரிவில் இருந்து மீண்டது. அதிரடியாக ஆடிய ஷாருக்கான் ஐபிஎல்-இல் தனது முதலாவது அரை சதத்தை பதிவு செய்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மில்லர் வழக்கம் போல அதிரடியாக 26 ரன்கள் எடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடிய சுதர்சன் அரைசதம் கடந்து 84 ரன்கள் குவித்தார். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. சிராஜ், ஸ்வப்னில் சிங், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 201 ரன்கள் என்பது கடின இலக்கு போலத் தோன்றினாலும், எல்லா ஆட்டங்களிலும் எளிதில் அடிக்கப்படுவதால் நம்பிக்கையுடன் பெங்களூரு அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பெங்களூரு அணிக்கு டு பிளசிஸ் நல்ல தொடக்கம் கொடுத்து 24 ரன்களில் வழக்கம் போல நடையைக் கட்டினார். எப்போதும் போல பொறுப்புடன் ஆடிய கோலியுடன் அதிரடி வீரர் வில் ஜேக்ஸ் இணைந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபக்கமும் சிதறடித்தார்.

50 runs in six minutes! Amazing RCB player will jacks

கோலி அரைசதம் கடந்து 70 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றார். மறுபுறம் வில் ஜேக்ஸ் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அடுத்த ஆறு நிமிடங்களில் 50 ரன்கள் எடுத்து 41 பந்துகளில் சதமடித்தார். இதில் 10 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல்-இல் இது 5ஆவது அதிவேக சதமாகும். மாலை 6.41 க்கு அரை சதம் கடந்த வில் ஜேக்ஸ் 6.47 க்கு சதம் கடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.சி.பியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர்கள் வெளியிட்ட பதிவும் வைரலாகி வருகிறது.