Skip to main content

உங்கள் யுக்தி விராட் கோலியிடம் எடுபடாது... ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அறிவுரை கூறும் ஸ்டீவ் வாக்!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

Steve Waugh

 

உங்கள் யுக்தி விராட் கோலியிடம் எடுபடாது என ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் அறிவுரை கூறியுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இத்தொடரில் பங்கெடுக்கும் அணி வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டித் தொடர், சிட்னி மைதானத்தில் வரும்  நவம்பர் 27 -ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 

 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக், இது குறித்துப் பேசுகையில், "சீண்டுதல் யுக்தி குறித்து விராட் கோலி கவலைப்படமாட்டார். சிறந்த வீரர்களிடம் இது போன்ற செயல் எடுபடாது. அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது நல்லது. இதுபோன்ற செயல் அவருக்குக் கூடுதல் உத்வேகம் அளித்து அதிக ரன்களை எடுக்க வழிவகுக்கலாம். ஆதலால், அவரிடம் சீண்டல் இல்லாமல் இருப்பதே நலம்" எனக் கூறினார்.

 

 

Next Story

கோலியால் அந்த சாதனையை முறியடிக்க முடியாது! - ஆஸ்திரேலிய வீரர் பளிச்

Published on 04/11/2018 | Edited on 04/11/2018
Steve

 

 

 

இந்திய கிரிக்கெட் வீரர் கோலி அடுத்தடுத்து பல சாதனைகளை படைத்தும், முந்தைய சாதனைகளை முறியடித்தும் வருகிறார். அந்தவகையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கரின் அதிவேக பத்தாயிரம் ரன்கள் சாதனையை முறியடித்தார். அதேபோல், தொடர்ந்து மூன்று சதமடித்த முதல் இந்திய வீரர் என்கிற சாதனையையும் படைத்தார். 
 

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் கோலியைப் பாராட்டி வருகின்றனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரெய்ன் லாரா, கோலியைக் கிரிக்கெட்டின் தலைவர் எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்தபடியாக, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கோலியைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். 
 

 

 

அவர் பேசுகையில், “கிரிக்கெட்டின் மீதான தீராத பசி, வெறி, காதல், அவர் காட்டும் ஸ்திரத்தன்மை, வேகம், ஆர்வம் என எல்லாவற்றையும் பார்க்கும்போது, இதுவரை உலக கிரிக்கெட் என்னென்ன சாதனைகளை வைத்திருக்கிறதோ... அதையெல்லாம் கோலி முறியடித்துவிடுவார் என்றே தோன்றுகிறது. ஆனால், ஆஸ்திரேலிய லெஜண்ட் டான் ப்ராட்மேனின் சராசரி 99.99 ரன்களை விராட் கோலியால் தொடவே முடியாது” என தெரிவித்துள்ளார். 
 

ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டான் ப்ராட்மேன் 99.99 சராசரி ரன்களை வைத்திருந்தார். ஆனால், தனது கடைசி போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறியதால், அவரால் சராசரியில் சதம் போடமுடியவில்லை. தற்போது, கோலியின் சராசரி ரன்கள் 75.23 என்பது குறிப்பிடத்தக்கது.