இந்தியா -ஆஸ்திரேலியா மோதும் 20 ஓவர் தொடரின் முதல் போட்டி தற்போது நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, இந்திய அணியின் கே.எல். ராகுலும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
ஷிகர் தவான் ஒரு ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 23 ரன்களிலும், மனிஷ் பாண்டே 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கே.எல். ராகுல் சிறப்பாக ஆடி அரைசதமடித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும் சிறிது நேரத்தில் ஆட்டமிழந்ததால், இந்திய அணி 140 ரன்களை தொடுமா என சந்தேகம் எழுந்தது. ஆனால், ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை பந்தாடினர். கடைசிக்கட்டத்தில் அவரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியா அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.