Skip to main content

திணறும் தென் ஆப்ரிக்கா அணி; புரட்டி எடுக்கும் இந்திய அணி!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

இந்தியா மற்றும் தென்ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கி தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தில்  9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்களும், ரஹானே 115 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 51 ரன்களும் விளாசினர். தென்ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் லின்டே 4 விக்கெட்டுகளும், காஜிசோ ரபடா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்ரிக்கா அணி, இந்திய அணியின் பந்து வீச்சினை தாக்கு பிடிக்க முடியாமல்,  3-வது நாள் ஆட்டத்தில் 162 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 

தென் ஆப்ரிக்க அணியில் அதிகபட்சமாக ஜுபைர் ஹம்சா 62 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், நதீம், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து, பாலோ-ஆன் ஆன தென்ஆப்ரிக்க அணி 335 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது. தற்போது தென் ஆப்ரிக்க அணி 21 ஓவர்கள் முடிவில், 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.