Skip to main content

விலைபோகாத புலவர்; சாவ்லாவை தூக்கிய சாம்பியன்ஸ்!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

chawla

 

இந்தியாவில் வருடந்தோறும் நடக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம், இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 292 வீரர்கள் இன்று ஏலம் விடப்படவுள்ளனர். இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஏலம் எடுக்கப்படவில்லை. கேதார் ஜாதாவையும் எந்த அணியும் முதல் கட்ட ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

 

இந்த ஏலத்தில், மோரிஸ் ரூ.16.25 கோடிக்கும், மேக்ஸ்வேல் ரூ.14.25 கோடிக்கும் ஏலம் போன நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி, ஆடம் மில்னேவை ரூ.3.2 கோடிக்கும், நேதன் குல்டர் நைலை ரூ.5 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளது.

 

உமேஷ் யாதவை டெல்லி அணி ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சனை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இஷ் சோதியை யாரும் ஏலம் கேட்கவில்லை. தமிழ்ப் புலவர் என்று சென்னை ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஹர்பஜன் சிங்கும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. பியூஷ் சாவ்லாவை நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ரூ.2.4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

 

 

Next Story

ஐபிஎல் 2024 ஏலம் எப்போது? ; வெளியான புது அப்டேட்

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

When is IPL 2024 auction? ; New update released

 

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் 2008 முதல் நடந்து வருகிறது. அதன் 17 ஆவது சீசன் 2024 இல் நடக்க உள்ளது. இனி ஒவ்வொரு வருடமும் வீரர்கள் ஏலம் நடக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், அது எப்போது நடக்கும் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. பெரும்பாலும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் ஐபிஎல் ஏலம் நடக்கலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. முதல் முறையாக இந்தியாவிற்கு வெளியில் ஐபிஎல் ஏலமானது நடக்க உள்ளது. தக்கவைக்கப்பட்ட அணி வீரர்களின் பட்டியலை கொடுக்க கடைசி தேதி நவம்பர் 10 எனவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் பட்டியல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் 100 கோடி வரை ஏலத்தில் பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது கடந்த ஐபிஎல் ஏலத்தை விட 5 கோடிகள் அதிகமாகும்.

 

ஐபிஎல் 2023 இல் பயன்படுத்தியது போக மீதமுள்ள தொகை எனப்படும் அணிகளின் பர்ஸ் தொகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகமான தொகை வைத்துள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் அணி 12.20 கோடிகள் வைத்துள்ளது. ஐபிஎல் அணிகளில் குறைந்தபட்ச பர்ஸ் தொகையாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 லட்சத்தை வைத்துள்ளது. சன்ரைசர்ஸ் 6.55 கோடிகளும், குஜராத் மற்றும் டெல்லி அணிகள் 4.45 கோடிகளும், லக்னோ அணி 3.55 கோடிகளும், ராஜஸ்தான் ராயல்ஸ் 3.35 கோடிகளும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 1.75 கோடிகளும், கொல்கத்தா அணி 1.65 கோடிகளும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.5 கோடிகளும் கொண்டுள்ளது.

 

ஐபிஎல் 2023 ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாம் கரன் ஆவார். இவர் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 18.5 கோடிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் ஆவார். இவரைத் தாண்டி ஐபிஎல் 2024 ஏலத்தில் எந்த வீரரும் எடுக்கப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

- வெ.அருண்குமார் 

 

 

 

Next Story

“தோனியை விட அதிக ரன்களையும் விக்கெட்களையும் எடுத்திருக்கலாம்; ஆனால்...” - ஹர்பஜன் சிங் 

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

“Could have taken more wickets than Dhoni; But...”- Harbhajan Singh

 

16 ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அணிகள் தொடர் வெற்றிகளைப் பெற கடுமையாகப் போராடி வருகின்றன. 

 

கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் சென்னை அணியின் கேப்டன் தோனி, அனைத்து அணிகளையும் அணி வீரர்களையும் விஞ்சி ரசிகர் பட்டாளத்துடன் தொடரின் நாயகனாக திகழ்கிறார். முன்னாள் வீரர்களும் பயிற்சியாளர்களும் தோனியைப் புகழ்ந்து வரும் நிலையில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரும் சென்னை அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங், தோனியை புகழ்ந்துள்ளார்.

 

தனியார் கிரிக்கெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஹர்பஜன் சிங், “தோனியை விட பெரிய கிரிக்கெட் வீரர் இந்தியாவில் இருக்க முடியாது. அவரை விட யாரோ ஒருவர் அதிக ரன்கள் எடுத்திருக்கலாம்; அவரை விட அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கலாம்; ஆனால் அவரை விட பெரிய ரசிகர் பட்டாளம் யாருக்கும் இல்லை. தோனி இந்த ரசிகர்களை மனதார ஏற்றுக்கொண்டார். அவர் தனது சக வீரர்களையும் மதிக்கிறார். அவர் மிகவும் அன்புடனும் உணர்ச்சியுடனும் நடந்துகொள்கிறார். தோனி இந்த அன்பையும் உணர்ச்சியையும் 15 ஆண்டுகளாக தனது இதயத்தில் சுமந்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

 

தொடர்ந்து ஷிவம் துபேயின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், “ஷிவம் துபேயின் ஹிட்டிங் ரேஞ்ச் அபாரம். தவறான பந்துகள் எப்போதெல்லாம் வீசப்படுகிறதோ அதை பெரிய ஷாட்களாக மாற்றுகிறார். இத்தகைய குணங்களைக் கொண்ட வீரர்கள் மீது சிஎஸ்கே அதிக கவனம் செலுத்துகிறது. ஷிவம் துபே தொடர்ந்து டாப் ஆர்டரில் பேட் செய்வதற்கான வாய்ப்புகளைப் பெற வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.