Skip to main content

இந்தியாவின் முடிவால் அதிருப்தி! - வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

chahal

 

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதலாவது இருப்பது ஓவர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கே.எல். ராகுல் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்களை, இலக்காக நிர்ணயித்தது.  

 

இந்தநிலையில், இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்யும்போது, அவரது தலையில் பந்து தாக்கியது. மேலும், அவருக்கு தசை பிடிப்பும் ஏற்பட்டது. இதனால், ஜடேஜா ஃபீல்டிங் செய்ய வரவில்லை. புதிய ஐ.சி.சி விதிமுறைப்படி, வீரருக்குத் தலையில் காயம் ஏற்பட்டால், மாற்று வீரரை களம் இறக்கிக் கொள்ளலாம். காயம் அடைந்த வீரர், பேட்ஸ்மேனாக இருந்தால், வேறு ஒரு பேட்ஸ்மேனையும், பந்துவீச்சாளராக இருந்தால் வேறு ஒரு பந்து வீச்சாளரையும் களம் இறக்கலாம். அப்படிக் களம் இறங்குபவர்கள் பேட்டிங் செய்யவும் பந்து வீசவும் முடியும். இதனடிப்படையில், இந்தியா  சஹாலை களமிறக்கியது.

 

இதற்கு ஆஸ்திரேலியா அணி, கடும் அதிருப்தியை தெரிவித்தது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கார், போட்டி நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து நடந்த போட்டியில், சாஹல், ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் பின்ச் ஆகியோரையும், மேத்யூ வேடையும் ஆட்டமிழக்கச் செய்து, போட்டியை இந்தியா பக்கம் திருப்பியது குறிப்பிடத்தக்கது.