Skip to main content

டாஸ் போடும் முறையை நிறுத்த வேண்டும்! - டூப்ளெஸ்ஸி வேண்டுகோள்

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
Duplessis

 

 

 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டாஸ் போடும் முறையை நீக்கவேண்டும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டூப்ளெஸ்ஸி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

சில வாரங்களுக்கு முன்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டாஸ் போடும் முறையை நீக்கவேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து கருத்துகேட்டு முடிவுகள் எடுக்க குழு அமைத்த நிலையில், ரிக்கி பாண்டிங் போன்றோரின் எதிர்ப்பால் இந்த பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது. ஒருவேளை இது நடைமுறைப்படுத்தப்பட்டால், வெளிநாட்டு அணிக்கு சாதகமான முறையில் சில மாற்றங்கள் நிகழும் என சொல்லப்பட்டது.
 

 

 

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூப்ளெஸ்ஸி டாஸ் முறையை நீக்கவேண்டும் என்ற முடிவின் தீவிர ரசிகன் நான் என தெரிவித்துள்ளார். மேலும், சொந்த நாட்டு பிட்சுகளை அது தென் ஆப்பிரிக்காவாக இருந்தாலும் அவர்களுக்கு சாதகமாக மாற்றி வைத்துக் கொள்கிறார்கள். இதனால், வெளியில் இருந்து வரும் அணிகள் பெரும்பாலான போட்டிகளில் தோற்றுப்போகின்றன. அதனால், அதில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார். 
 

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, முதல் டெஸ்ட் போட்டியில் 278 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததுதான் டூப்ளெஸ்ஸி இவ்வாறு பேசுவதற்குக் காரணம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.