Skip to main content

Pak vs NZ : ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Cricket World Cup; pakistan vs new zealand score update

 

உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது மழை வந்ததால் ஆட்டம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

 

உலகக் கோப்பையின் 35 ஆவது லீக் ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று (04-11-23) நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது. 

 

இதில் அதிகபட்சமாக ரவீந்திரா 94 பந்துகளில் 15 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடித்து 108 ரன்களை குவித்தார். அதே போல், வில்லயம்சன் 79 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடித்து 95 ரன்களை எடுத்து அவுட்டானார். இதில்  பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது வாசிம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது.

 

அதனை தொடர்ந்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபஹர் ஷமான் 69 பந்துகளில் 7 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் அடித்து 106 ரன்களுடனும்,  பாபர் அசாம் 51 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடித்து 47 ரன்களுடனும்  ஆடிய நிலையில், 21.3 ஓவருக்கு 1 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மழை நின்றதால் 6.30 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்