Skip to main content

உலக குத்து சண்டையில் காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனைகள்!

Published on 19/11/2018 | Edited on 19/11/2018

 

டில்லியில் பெண்களுக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் ரவுண்டு 16ல் இந்தியாவின் மேரி கோம் கஜகஸ்தானின் கெசினோயேவா உடன் மோதினார். அதிரடியாக விளையாடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
 

அதேபோல இந்தியா சார்பில் 69 கிலோ மற்றும் 81 கிலோ எடைப் போட்டியில் விளையாடியவர்களும் ரவுண்ட் 16ல் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். 69 கி பிரிவில் இந்தியாவுக்காக விளையாடிய லவ்லினா பனாமாவின் அதீனா பைலோன் ஆகியோர் மோதினர். தொடக்கத்திலிருந்து போராடிய லவ்லினா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
 

பின் 54 கிலோ எடைப்பிரிவில் ரவுண்டு 16ல் இந்தியா சார்பில் விளையாடிய மணிஷா மவுன், கஜகஸ்தானின் டினா ஜலாமனுடன் மோதினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த மனிஷா 5-0 என்று வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கான தேதி அறிவிப்பு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
World Chess Championship Series Date Announcement

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் ஆவார். அதே சமயம் செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

World Chess Championship Series Date Announcement

இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் வரும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செஸ் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பிடே (FIDE - International Chess Federation) அறிவித்துள்ளது. செஸ் தொடரை நடத்த குறைந்தபட்ச ஏலத் தொகையாக சுமார் ரூ.68 கோடி நிர்ணயிக்கபட்டுள்ளது. இந்தப் போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற அறிவிப்பு ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சார்பில் குகேஷ் - சீன வீரர் டிங் லிரெனை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

குத்துச் சண்டை மைதான திறப்பு விழா (படங்கள்)

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சந்தீப் ராய் ரத்தோர், இன்று காலை 11.30 மணியளவில் புதுப்பேட்டை, இராஜ ரத்தினம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை மைதானம் மற்றும் ஸ்டோர் ரூம் திறந்து வைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.