Skip to main content

இனி மனைவியுடன் வெளிநாட்டு போட்டிகளுக்கு வராதீர்கள் - கடுப்பான பிசிசிஐ...

Published on 01/02/2019 | Edited on 01/02/2019

 

fhyhfghf

 

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்  தங்கள் குடும்பத்தினரை  வெளிநாட்டு போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும் போது பல நடைமுறை சிக்கல்கள் உண்டாவதாக பிசிசிஐ வருத்தம் தெரிவித்துள்ளது. இந்திய அணி வெளிநாடுகளில் விளையாட சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளும் பொது தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டுமென இந்திய கேப்டன் கோலி பிசிசிஐ யிடம் கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்ற பிசிசிஐ, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது முதல் பத்து நாட்கள் மட்டும் வீரர்களோடு குடும்பத்தினர் இருக்கலாம் என அனுமதித்தது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து கூறியுள்ள பிசிசிஐ, வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் குடும்பத்தினரை உடன் அழைத்து வருவதை தவிருங்கள் என கூறியுள்ளது. வீரர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பு விஷயங்கள் மற்றும் தங்கவைப்பதற்கான விஷயங்களில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. வீரர்கள் குறைவான நபர்களுடன் வெளிநாடுகளுக்கு வந்தால் அவர்களுக்கான பிசிசிஐ ஏற்பாடுகளை எளிதாக செய்துவிடும் ஆனால் அதிகமான நபர்கள் வரும்போது நடைமுறைச்சிக்கல்களை சமாளிப்பது கடினமாகிறது' என தெரிவித்துள்ளது.