Skip to main content

தமிழிசை சொன்ன பானை கதை... முயன்றால் பலன் கிடைக்கும்!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

அதிரடி கருத்துக்களுக்கு சொந்தகாரரான முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அங்கு ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து தமிழக அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவர் இருந்த பாஜக தலைவர் பதவியில் கூட அடுத்த நான்கு மாதங்களுக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தனர். 


அந்த அளவிற்கு அவரின் ஆளுமை அதிரடியான ஒன்றாக இருந்தது.  தற்போது தெலுங்கானாவில் ஆளுநர் பொறுப்பில் இருந்தாலும் தமிழக மக்களை மறக்காமல் முக்கிய தினங்களின்போது வாழ்த்துகளை தெரிவித்து வந்தார். இந்நிலையில் இன்று ஒரு நிமிட மோட்டிவேஷன் என்று கூறி, ஒரு பானை கதை ஒன்றை கூறியுள்ளார். இந்த கதையில் கூறியுள்ளது போல அனைவரும் உழைக்க வேண்டும், அதற்கேற்ப பலன் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழிசை கூறிய கதையின் வீடியோ வருமாறு,

 

 

 

Next Story

“அவர் அலங்காரமாக இருந்தாலும் காலையில் தயிர் சாதம் தான் சாப்பிடுகிறார்” - தமிழிசை சவுந்தரராஜன்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

lord venkateshwara only eats curd rice in the morning – Tamilisai Soundarrajan

 

தெலங்கானா மாநில ஆளுநர் ஸ்ரீமதி தமிழிசை சவுந்தரராஜன் சனிக்கிழமை திருமலையில் உள்ள வெங்கடேசபெருமானை தரிசனம் செய்தார். இதன் பின் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “முக்கியமான நபர்கள் காலை 10 மணிக்கு வந்து 11 மணிக்குச் செல்வது நல்ல ஏற்பாடு எனவே நிர்வாகத்தை மிகவும் பாராட்டுகிறேன். இரவு முழுதும் மக்கள் காத்திருந்து கடவுளைத் தரிசிக்கும் சூழல் மாறி விடியற் காலையிலேயே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இறைவனும் மகிழ்ச்சியாக உள்ளார்.

 

எளியோரைக் காண்பது தானே வெங்கடேஸ்வர பெருமாளுக்கு மகிழ்ச்சி. அவர் எவ்வளவு தான் அலங்காரமாக இருந்தாலும் காலையில் எளிமையான தயிர் சாதத்தைத்தானே சாப்பிடுகிறார். மாற்றுத்திறனாளிகள் எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என்றார்.

 

அதே போல் நேற்று தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மூக்கு வழியாகச் செயல்படும் சொட்டு மருந்தை நாம் கண்டுபிடித்துள்ளோம். இது நமக்குப் பெருமை. ஆரம்ப காலத்தில் கொரோனா தடுப்பூசியை ஆரம்பிக்கும் பொழுது பல கட்சிகள் மத்திய அரசின் மீது விமர்சனம் வைத்தனர். தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்கிறது. 130 கோடி மக்களைக் கொண்ட நாடு பாதுகாப்பாக உள்ளது என்றால் அதற்கு நாம் எடுத்துக்கொண்ட தடுப்பூசிதான் காரணம்” என்றார்.

 

 

Next Story

“சம உரிமை பேசும் நிலையில் பெண் ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட்...” - தமிழிசை ஆதங்கம் 

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

"Budget without the speech of a female governor while speaking on equal rights ..." - Tamilisai

 

புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கம்பன் கலையரங்கில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு சமூக சேவையாற்றிய பெண்கள், சாதனைகள் பல புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர்.

 

இந்த விழாவில் தலைமையுரையாற்றிய முதல்வர் ரங்கசாமி, "பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகவே அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்த முதல் மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது, மேலும் நமது அமைச்சரவையில் பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்ததே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகத்தான்" என பெருமிதத்துடன் கூறினார்.

 

"Budget without the speech of a female governor while speaking on equal rights ..." - Tamilisai

 

தொடர்ந்து சிறப்புரையாற்றிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், "நல்லதை செய்து நல்லவற்றை வரவேற்றால் அதுதான் மக்களாட்சியின் மிகப்பெரிய பலம் என்பதை நான் உணர்ந்து இருக்கின்றேன். தெலுங்கானாவில் ஏராளமான மகளிர் தின விழாக்களில் கலந்து கொண்டேன். அது பெரிய விஷயம் அல்ல. அதே நேரம் அந்த மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இன்றைக்கு பெண்களுக்கு சம உரிமை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் நிலையில் ஒரு பெண் ஆளுநரின் உரை இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த காலத்தில் ஒரு பக்கம் பெண் உரிமை பேசுகின்றோம், ஒரு பக்கம் மறுக்கப்படுகின்றது. பெண்கள் என்றால் எப்போதும் சுயகர்வத்தை பார்ப்பதை விட மக்கள் நலனைத்தான் பார்ப்பார்கள். அது வீட்டு நலமாக இருந்தாலும் சரி நாட்டு நலமாக இருந்தாலும் சரி. ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யலாம். ஆனால் ஆளுநரின் கையெழுத்து இல்லாமல் பட்ஜெட் நிறைவேறாது. ஆளுநர் என்ன செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்தனர், உரையாற்ற அனுமதிக்கப்படாததால் ஆளுநர் கையொப்பம் இட மறுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம். இதை நான் அதிகாரமாக சொல்லவில்லை. அரசியலமைப்பு சட்டம் சொல்கின்றது. ஆனால் மக்கள் நலத்திட்டம் எந்த நிலையிலும் தடைப்படக்கூடாது என்று பட்ஜெட்டிற்கு கையொப்பம் போட்டு கொடுத்தேன். பெண்கள் நாட்டை ஆள முடியும் என்ற நிலை வந்துள்ளது. மேலும் பெண்கள் இன்னும் தங்கள் உரிமையை பெறவேண்டிய நிலையும் உள்ளது. 

 

தொழில் துறையிலும் முன்னுரிமை வழங்க வேண்டும். அதற்கு பெண்கள் தொழில் துறைக்கு வர வேண்டும். ஒரு பெண் வெளியே வந்தால் ஆயிரம் ஆண்கள் வெளியில் வருவதற்கு சமம். அதை நான் உணர்ந்துள்ளேன். இன்றைக்கு இளம் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தண்டணை அதிகரிகக வேண்டும். பெண்குழந்தைகளை பாதுகாப்பது சமூகத்தின் கடமை, ஆசிரியர்களின் கடமையாகும். இதை முழுவதுமாக கண்காணிக்கப்பட வேண்டும்"  என கூறினார்.