Skip to main content

இயற்கையே தாய்மை - மாத்திரைகள் இன்றி மாதவிடாய் நாட்களுக்கு தீர்வு!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

நம் குடும்பத்து பெண்கள், இந்திய பண்பாடு மற்றும் கலாச்சார வாழ்வியல் அமைப்பின் சில சூழல்களில் குறிப்பாக, குடும்பத்துடன் புனித தலங்கள் செல்லும் போதும், சில விசேஷ நாள்கள், திருமணம், கிரகப்பிரவேசம், காதுகுத்து, குல தெய்வ வழிபாடுகள் போன்ற சுப நிகழ்ச்சிகளின் போது எவ்வளவுதான் முன் ஏற்பாடுகளுடன் இருந்தாலும் ஒரு விதமான கலவர முகத்துடன் அலைவதை பார்த்திருப்போம். அதுவும் சில வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றும் நேரம் ‘‘திருதிரு முழிகளுடன்’’ எரிந்து விழுந்து கொண்டு இருப்பார்கள். காரணம், இப்ப வருமோ....எப்ப வருமோ!... என்ற பயமும் படபடப்பும்தான். 

 

a


 

 

"ஏன்தான் இந்த பொம்பளையா பொறந்து தொலைச்சனோ... என்ற புலம்பல்களுடன், "இந்த கெரகத்த  வராம பண்ண முடியாதா ஒரு ரெண்டு நாளைக்கி" என்ற ஏக்கத்துடன் புலம்பி தள்ளுவார்கள் பெண்கள். இதற்கு மிக எளிய வழி ஒன்று உண்டு. மருந்து மாத்திரைகள் எல்லாம் தேவை இல்லை. அது வரும் தேதிக்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பு இருந்தே நம் வீட்டில் சட்னி அரைக்கப் பயன்படும் உடைச்சகடலை எனும் பொரிகடலையை ஒரு உள்ளங்கையளவு எடுத்து அவ்வப்போது வாயில் போட்டு மென்று தின்று கொண்டு இருந்தாலே வழக்கமாக இரத்தப்போக்கு வெளியேறும் அந்த மூன்று நாட்களை ஒன்றிரண்டு நாட்களை தள்ளிப் போடலாம். இது எளிய உணவுமுறை சார்புவழி. மருந்துகடைகளில் வாங்கிபோடும் மாத்திரைகளும் விவகாரத்தை தள்ளிப்போக வைக்கும். ஆனால், இரண்டு நாட்கள் கழித்து உடம்பு அதிக சூடாகி இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். அடி வயிறு வலி அதிகமாகவும், கைகால் இடுப்பு வலியும் தாங்கி மாளாது. நொறுக்கு தீனி மருத்துவ வழியே சிறந்த வழி. காலையில் எழுந்து சிறு உடற் பயிற்சி மூலமாகவும் தள்ளிப் போடலாம்.

இரண்டு கால்களின் பாதங்களையும் சேர்த்து நின்று கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு தூக்கிய கைகளின் உள்ளங்கைகளை வீட்டு வாசக்கால், அல்லது மாடிப்படி சுவர் எதிலாவது வைத்து அழுத்தி அதே நேரம் கால் பாதங்களை தரையில் இருந்து உயர்த்தி கீழ் இறக்கி கைகளின் உள்ளங்கை பகுதிகளை அழுத்துவதன் மூலம் ஒரு உடற்பயிற்சி போல செய்தாலே கருப்பையின் வாய் பகுதி மற்றும் கர்ப்பப்பை சுவர்கள் மற்றும் சவ்வுகள் உள்ளிழுக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக  சுருங்குவதால் இரத்தப்போக்கு இரண்டு மூன்று நாட்கள் தள்ளிப்போகும். சும்மா முயற்சி செய்து பாருங்க தாய்க்குலங்களே. இயற்கையே தாய்மை.