Skip to main content

 இஸ்ரேல் போர்; இளம்பெண்ணின் தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற கொடூரம்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

The young lady lost her life for israel incident

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், காசாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சி விழாவில் பங்கேற்ற பலரை சுட்டுக் கொன்றனர். அதில் சிலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். 

 

இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்ற ஒரு இளம்பெண்ணை சித்ரவதை செய்து அவரது தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

 

இசை நிகழ்ச்சி விழாவில் பங்கேற்ற இளம்பெண் ஷானி லோக். இவர் டாட்டூ கலைஞராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், பிணைக்கைதியாக கொண்டு செல்லப்பட்ட ஷானி லோக்கின் தலையில்லாத உடலை காசா நகரில் ஹமாஸ் அமைப்பினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில், அவரது உடலை ஒரு லாரியில் வைத்து சுற்றிலும் ஆயுதம் ஏந்தியவர்கள் முழக்கமிட்டபடி கொண்டு செல்கின்றனர். இது பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. டாட்டூ கலைஞர் ஷானி லோக் கொல்லப்பட்டதை இஸ்ரேல் ஜனாதிபதி இசோக் ஹெர்சோக் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது தலை கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்