Skip to main content

‘என்னை கொலை செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்...’- அதிபர் மதுரோ

Published on 31/01/2019 | Edited on 31/01/2019
maduro


வெனிசூலா நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு அமெரிக்காதான் காரணம் என்று குற்றம் சாட்டி, அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாக சமீபத்தில் அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்தார். அதனை அடுத்து மதுரோவிற்கு அழுத்தம் தரும் வகையில் வெனிசூலா அரசு எண்ணெய் நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.
 

இந்நிலையில் தன்னை கொலை செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக நிகோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டினார். ரஷ்யாவை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “என்னை கொலை செய்யும்படி கொலம்பியா அரசு மற்றும் கொலம்பியாவை சேர்ந்த கொலைகார கும்பல்களுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு நாள் எனக்கு ஏதாவது நடக்கலாம். எனக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு டிரம்ப் மற்றும் கொலம்பியா அதிபர் இவான் டியூக் தான் பொறுப்பாவார்கள்” என்று கூறினார்.
 

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலைநகர் கராக்கசில் நடந்த ராணுவ தின நிகழ்ச்சியின் போது, ஆளில்லா விமானங்கள் மூலம் அதிபர் நிகோலஸ் மதுரோவை கொல்ல முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

 


 

சார்ந்த செய்திகள்