Skip to main content

ஹாங்காங் விவகாரம்.... சீனாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அதிரடி திட்டம்...

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

uk citizenship to hongkong people

 

ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு சீனா ஒப்புதல் அளித்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 30 லட்சம் ஹாங்காங் மக்களுக்கு தங்கள் நாட்டில் குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. 


பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்த ஹாங்காங் சுதந்திர பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்பு, அது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஹாங்காங் பகுதியை நிர்வகிக்க நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ஆட்சி நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நிர்வாக பகுதியான ஹாங்காங்கை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுவரும் சீனா அதற்கான பணிகளையும் ஹாங்காங் மக்களின் எதிர்ப்பை மீறி செய்து வருகிறது. குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங் மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்த சூழலில், அந்நகரத்தின் நேரடி அரசியலில் தலையிடும் வகையிலான தேசிய பாதுகாப்பு சட்டத்தை வெள்ளிக்கிழமை நிறைவேற்றியது சீனா. ஹாங்காங் நகரத்தின் சிறப்பு சுயாட்சி மற்றும் சுதந்திரங்களை இந்த சட்டம் பாதிக்கக்கூடும் என உலக நாடுகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் சீனாவின் இந்த செயலுக்கு பதிலடி தரும் வகையில் ஊதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது இங்கிலாந்து. 

ஹாங்காங் இங்கிலாந்து கட்டுப்பாட்டிலிருந்துள்ளதால், அங்குள்ளோரில் பலர் வெளிநாடு வாழ் பிரிட்டிஷாராகவே உள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாடு வாழ் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளனர். எனவே சீனாவின் திட்டத்திற்கு பதிலடியாக 3,50,000 வெளிநாடு வாழ் பாஸ்போர்ட் வைத்திருப்போரின் விசா உரிமைகளை நீட்டிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்படும் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை தெரிவித்துள்ள சூழலில், அந்நாட்டில் உள்ள சுமார் 30 லட்சம் பேருக்கு இதன் மூலம் இங்கிலாந்து குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

 

 


விசா உரிமைகள் ஆறு மாத காலத்திலிருந்து 12 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதால், எதிர்காலத்தில் குடியுரிமை பெறுவதற்கான வழியை இது எளிதாக்கும் என இங்கிலாந்து அரசு தெரிவிக்கிறது. அதேபோல தற்போது ஹாங்காங்கில் வசிக்கும் வெளிநாடு வாழ் மக்களின் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ள எவரையும் இந்த உரிமைகள் உள்ளடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 30 லட்சம் ஹாங்காங் மக்கள் வருங்காலத்தில் எளிதாக இங்கிலாந்து குடியுரிமை பெற முடியும் எனத் தெரிகிறது. ஹாங்காங் நகரத்தின் மொத்த மக்கள்தொகையே 75 லட்சம் என்ற சூழலில், இங்கிலாந்தின் இந்த அறிவிப்பு சீன அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்