Skip to main content

ரஷ்யன் ராக்கெட் ‘சோயுஸ்’ ஃபெய்லியர்!!! (வீடியோ)

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
russian rocket failiure

 

கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதி கிழக்கத்திய நேரப்படி காலை 4.40 மணிக்கு கஜகஸ்தானிலிருந்து ரஷ்யாவின் சார்பில் சோயுஸ் என்ற மனிதர்களை அழைத்துச் செல்லும் ராக்கெட் புறப்பட்டது. ஆனால் காலை 10.44 மணிக்கு (கிழக்கத்திய நேரப்படி) விண்வெளி வீரர்கள் இருவரும் திரும்புகிறார்கள். என நாசா தெரிவித்தது. ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறால் ராக்கெட் பழுதானது. இதனால் அதிலிருந்த விண்வெளி வீரர்கள் இருவரும் உடனடியாக பெலிஸ்டிக் இறங்கு வாகனத்தின்மூலம் பூமிக்கு திரும்பினர். ராக்கெட் புறப்பட்ட 90 விநாடிகளுக்குப் பிறகு, அதில் கோளாறு இருப்பதை உள்ளே இருந்த விண்வெளி வீரர்கள் உணர்ந்துள்ளனர்.

 

ராக்கேட்டின் எரிபொருள் சேமிப்பு கலங்கள் ஒவ்வொன்றும் தீரும்போது அவை உதிர்க்கப்படும் / கழட்டிவிடப்படும். அவ்வாறு உதிர்க்கப்படும்போதுதான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. உடனே சுதாரித்த வீரர்கள் உடனே வெளியே வந்துவிட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது, ரஷ்ய விண்வெளி மையம்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்