Skip to main content

பனியில் உறைந்து இறந்த உலகின் மூத்த நாய் கண்டுபிடிப்பு!

Published on 30/11/2019 | Edited on 01/12/2019


சூரியனின் வயதையும், பூமியின் வயதையும் கண்டுபிடித்துள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பல உயிரிங்கள் தோன்றிய ஆண்டுகளையும் வகைப்படுத்தி கூறி வருகிறார்கள். இன்னும் பூமியில் இருந்து கிடைக்கும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி செய்து  முடிவுகளைத் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், சைபீரியா நாட்டில் உள்ள , பனிக்கட்டி உறைவிடத்தில் சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்வாழ்ந்த ஒரு நாயின் உடலைக் கண்டெடுத்துள்ளனர்.



இந்த நாயின் உடல் உறைந்த பனியில் முற்றிலும் பாதுகாக்கப்பட்டதாக இருந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த உலகில் கண்டெடுக்கப்பட்ட அதிக வயதுள்ள நாய்களில் இதுதான் மிக மூத்த  வயதுடைய நாய் என தெரிவித்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்