Skip to main content

கியூபாவின் புதிய அதிபரானார் மிக்வெல் டயாஸ் கேனல்!

Published on 20/04/2018 | Edited on 20/04/2018

கியூபாவின் அதிபர் பதவியில் இருந்து ரவுல் காஸ்ட்ரோ விலகிய நிலையில், மிக்வெல் டயாஸ் கேனல் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

Castro

 

கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான பிடல் காஸ்ட்ரோ, 1959 முதல் 1976 வரை அந்நாட்டின் பிரதமராகவும், 1976 முதல் 2008ஆம் ஆண்டு வரை கியூபாவின் அதிபர் பதவியும் வகித்தார். அதன்பின்னர், உடல்நலக்குறைவு காரணமாக தான் வகித்த பதவியை 2008ஆம் ஆண்டு விட்டு விலகிய பிடல், தனது ரவுல் காஸ்ட்ரோவை கியூபாவின் அதிபராக நியமித்தார். ரவுல் காஸ்ட்ரோ கியூப அதிபராக கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பதவிவகித்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் அதிபர் பதவியில் இருந்து விலகி, கட்சியின் தலைவராக மட்டுமே நீடிக்கப்போவதாக அறிவித்தார்.

 

இதையடுத்து, கியூபாவின் துணை அதிபராக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பதவிவகித்து வரும் மிக்வெல் டயாஸ் கேனலை அதிபராக்கல் என ரவுல் காஸ்ட்ரோ பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட தேர்தலில் 604 வாக்குகளில் 603 வாக்குகள் பெற்று கியூபாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றார். 

 

இந்நிலையில், கியூபாவின் வெளியுறவு கொள்கைகளில் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை என அறிவித்த மிக்வெல், தேவைப்படும் போது மக்களே மாற்றத்தைக் கொண்டுவருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்