Skip to main content

6 மணி நேரத்தில் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட மார்க் ஸூக்கர்பெர்க்!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

 Mark Zuckerberg pushed to fifth in 6 hours!

 

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நேற்று (04.10.2021) இரவு திடீரென முடங்கின. தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இச்செயலிகள் முடங்கிப் போனது. இதனால் அதைப் பயன்படுத்தும் பயனாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மற்ற சமூக வலைத்தளங்களை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, இன்று அதிகாலை 4 மணிக்குத் தொழில்நுட்ப பிரச்சனை அனைத்தும் சரிசெய்யப்பட்டு இந்த மூன்று வலைத்தளங்களும் பயன்பாட்டிற்கு வந்தன.

 

ஃபேஸ்புக் குழுமத்தில் உள்ள வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் சேவை கிட்டத்தட்ட 6 மணிநேரம் தடைப்பட்ட நிலையில், இந்த தொழில்நுட்ப கோளாறு முடக்கத்தால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஸூக்கர்பெர்க்கின் சொத்துமதிப்பில் 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் மார்க். அமெரிக்க பங்குசந்தைகளில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகிதம் சரிந்தது. அதேபோல் விளம்பர வருவாயும் ஒருமணிநேரத்திற்கு 7 கோடி ரூபாய் வீதம் 6 மணி நேரத் தடையால் 42 கோடி வருவாயை இழந்துள்ளது ஃபேஸ்புக். 

 

இந்த திடீர் முடக்கத்திற்கு முன்பு மார்க் ஸூக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 ஆவது இடத்திலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவி வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்; பதறி அடித்து போலீசிடம் ஓடிய கணவர்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
The husband ran to the police in panic for Whatsapp status by wife

உத்தரப்பிரேதசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்து போன மனைவி, தனது கணவனை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மேலும், அவர் நிரந்தரமான விவாகரத்து கேட்டும் வந்துள்ளார். இதனிடையே, கணவரை விட்டு பிரிந்து வாழ்வதால், முறையான விவாகரத்து கிடைக்கும் வரை தனக்கான பராமரிப்பு தொகையை கணவர் வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை, சமாதானம் செய்வதற்காக மனைவி வீட்டுக்கு கணவர் சென்றுள்ளார். ஆனால், அங்கு, மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘மனைவியும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். மேலும், மனைவி தனது பக்கத்து வீட்டு நபருடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அதுவே தகராறுக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளார். 

இந்த புகாரை அடுத்து கோபமடைந்த மனைவி, தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ‘என்னுடைய கணவரை கொல்பவருக்கு ரூ.50,000 பரிசுத்தொகை உடனடியாக வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். இந்த விவரம் கணவருக்கு தெரியவர, பதறி அடித்து போன அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும், இந்த தம்பதிகள் மாறி மாறி அளித்த புகார்கள் மீது கண்டு கொள்ளாமல் இருந்த போலீசார், இந்த முறை பிரச்சனையின் வீரியத்தை புரிந்துகொண்ட அவர்கள், மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.