Skip to main content

கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு வந்த சோகம்!

Published on 28/02/2020 | Edited on 29/02/2020

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 



சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சீனாவுக்கு சிறிதும் தொடர்பில்லாத நாடுகளில் கூட கொரோனா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 2000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த பாதிப்பு காரணமாக  தென் கொரியாவில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே ஹூண்டாய் நிறுவனம் கொரோனா பாதிப்பு காரணமாக தனது உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்