டென்மார்க்கிலுள்ள ஒரு உயிரியல் பூங்காவில் பென்குயின் ஜோடி ஒன்று தனது குட்டியை விட்டுவிட்டு, இருவரும் ஜோடியாக நீந்த சென்றுள்ளனர். குட்டி தனியாக இருப்பதை பார்த்த மற்றொரு ஓரினச்சேர்க்கை ஆண் பென்குயின் ஜோடி ஒன்று தன்னந்தனியாக விடப்பட்ட அந்த குட்டியை நாமே எடுத்து வளர்ப்போம் என்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அந்த குட்டியையும் இந்த ஜோடி தத்தெடுத்துகொண்டது.
இந்த ஓரினச்சேர்க்கை பென்குயின் ஜோடிக்கு பெற்றோர்களாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்துள்ளதாக பூங்காவின் பராமறிப்பாளர் தெரிவிக்கிறார். அதனால், தன்னந்தனியாக இருக்கும் இந்த குட்டியை பார்த்தவுடன், இது பெற்றோர்களால் கைவிடப்பட்டிருக்கும் ஆகையால் நாமே எடுத்து வளர்ப்போம் என்கிற எண்ணத்திற்கு இந்த ஓரினச்சேர்க்கை பென்குயின் ஜோடி முடிவு செய்து, அதை யாருக்கும் தெரியாமல் மீட்டுக்கொண்டு பாசம் காட்ட தொடங்கியுள்ளது.
இந்த குட்டி பென்குயினின் பெற்றோர் நீந்திவிட்டு திரும்பும்போது, இந்த குட்டியை தேடும். விரைவில் கண்டுபிடித்துவிடும் என்று சிசிடிவியில் இந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த பரமாறிப்பாளர் நினைத்துள்ளார். ஆனால், நடந்ததோ வேறு. அந்த குட்டியின் பெற்றோர் நீந்திவிட்டு திரும்பியும் குட்டியை பற்றி வெகுநேரமாக கண்டுக்கொள்ளவே இல்லாமல் இருந்திருக்கிறது.
பின்னர், தங்களின் குட்டியை கண்டுபிடித்தது இந்த பெற்றோர் பென்குயின் ஜோடி. குட்டியை மீட்க வந்த போது, இந்த ஓரினச்சேர்க்கை ஜோடி அவ்வளவு எளிதாக அந்த குட்டியை கொடுக்க மனம் வரவில்லை. சிறிது நேரம் கழித்தே அந்த குட்டியை கொடுத்திருக்கிறது அந்த ஓரினச்சேர்க்கை பென்குயின் ஜோடி. சிறிது நேரமே அந்த குட்டியை தத்தெடுத்து வைத்திருந்தாலும் மிகவும் பாசமாக வைத்திருந்ததை உணர்ந்த பூங்கா பராமறிப்பாளர். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ஒரு பென்குயினின் முட்டையை எடுத்து இந்த ஓரினச்சேர்க்கை ஜோடியும் கொடுத்துள்ளது. தற்போது இந்த ஓரினச்சேர்க்கை பென்குயின் ஜோடி, அந்த முட்டையை அடைகாத்து வருகிறது. இந்த முழு சம்பவத்தின் வீடியோவும் சிசிடிவியில் பதிவாகியிருப்பதை இந்த உயிரியல் பூங்காவுக்கான சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இந்த பாசமான காட்சிகள் அனைத்தும் வைரலாக பரவி வருகிறது.