Skip to main content

இன்று இரவு நிகழ்கிறது, இந்த ஆண்டின் முதல் 'முழு சூரிய கிரகணம்' ...

Published on 02/07/2019 | Edited on 02/07/2019

இந்த ஆண்டின் முதன்முறையாக முழு சூரிய கிரகணம் இன்று நடைபெறுகிறது.

 

first full solar eclipse of 2019

 

 

முழு சூரியனும் நிலவால் மறைக்கப்படுவதால் ஏற்படும் இந்த கிரகணத்தின் போது சூரியனின் மையம் முழுவதும் மறைந்து, விளிம்புகளில் மட்டும் ஒளி வட்டம் தெரியும். இப்படிப்பட்ட முழு சூரியகிரகணம் 2019 ஆம் ஆண்டில் இதுவரை வரவில்லை. இந்த நிலையில் இன்று இந்த கிரகணம் ஏற்படுகிறது.

சிலி நாட்டின் லாஸ் ஏரினா என்னும் இடத்தில் அந்நாட்டு நேரப்படி மதியம் 3.22 மணிக்கு தொடங்கி மாலை 5.46 மணி வரை இந்த கிரகணம் நீடிக்கிறது. இந்த கிரகணத்தை சிலி, அர்ஜென்டினா மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் உள்ள மக்களும் காண முடியும். இந்த நிகழ்வு நிகழும் போது இந்தியாவில் இரவு நேரம் என்பதால் இதனை இந்தியாவில் காண முடியாது.

இந்திய நேரப்படி இரவு 10.24 மணிக்கு துவங்கும் இந்த சூரிய கிரகணம், நாளை அதிகாலை 2.15 மணிக்கு முழுமை அடைகிறது. இதனை இந்தியாவில் நேரடியாக பார்க்க முடியாவிட்டாலும், இந்த கிரகணத்தை இணையத்தில் நேரலையாக காண பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்