Skip to main content

'அந்த 7 பேர் உயிருக்கு முதல்வர் பொறுப்பேற்பாரா?'-பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

Published on 01/05/2024 | Edited on 01/05/2024
 'Will the Chief Minister take responsibility for the lives of those 7 people?'-Premalatha Vijayakanth's question

ஏற்காட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் பொறுப்பேற்பாரா என தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''நாம் எத்தனையோ தேர்தலை பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த தேர்தலில் வாக்கு சதவீதங்களை மாறி மாறிச் சொல்கிறார்கள். முதலில் ஒன்று சொன்னார்கள். இப்படி மாற்றி மாற்றிச் சொல்லி கடைசியில் 69 சதவிகிதம் என சொல்கிறார்கள். ஏன் இந்த அளவிற்கு குளறுபடி என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஆறு மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த உடனே 7:00 மணிக்கு சரியான புள்ளி விவரத்தை சொல்லி விடுவார்கள். இதுதான் வழக்கம். இந்த முறை தான் மூன்று முறை, நான்கு முறை மாற்றி மாற்றி அறிவித்ததை பார்க்கிறோம். தேர்தல் ஆணையம் தமிழ்நாடு முழுக்க ஸ்ட்ராங் ரூம் என ஒன்று வைத்துள்ளார்கள். பெயரளவில் அது ஸ்ட்ராங் ரூமா என்பதை தேர்தல் ஆணையம் தான் உறுதி செய்ய வேண்டும். நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஸ்ட்ராங் ரூமில் கரண்ட் கட் ஆகி 20 நிமிடம் சிசிடிவி கேமரா செயலிழந்துள்ளது. இது உண்மையிலேயே வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காவிரியில் நாம் தண்ணீர் கேட்பதும், கோடை காலம் வந்தவுடன் தண்ணீர் இல்லை என்று சொல்வதும், பெண்கள் எல்லோரும் குடத்துடன் ரோட்டில் உட்கார்ந்து மறியல் செய்வதும் இன்று புதிது கிடையாது. இது ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. டிசம்பர் மாதத்தை நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். திருநெல்வேலி, தூத்துக்குடி என எல்லா இடத்திலும் வெள்ளம். தமிழ்நாட்டில் என்ன நிர்வாகம் இருக்கிறது என்பது தொடர்பாக நான் கேள்வியை வைக்க விரும்புகிறேன். ஒரு பக்கம் அதிகமாக மழை வெள்ளத்தை கடவுள் கொடுக்கிறார். அதனை சேமிக்கும் திறன்; ஒரு நல்ல கட்டமைப்பு; தொலைநோக்கு பார்வை இந்த அரசுக்கு இல்லை. தண்ணீர் வரும் பொழுது அதை கடலில் வீணாக கலந்து விடுகிறார்கள். அதனையடுத்து மூன்று நான்கு மாத காலங்களில் கோடை காலம் வந்து விடுகிறது. அப்பொழுது தண்ணீர் இல்லை என்ற நிலை உருவாகிறது.

கர்நாடகா தண்ணீர் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. கொடுக்கவில்லை என்றால் நாம் கேட்டு பெறத்தான் போகிறோம். ஆனால் ஏன் ஒவ்வொரு வருடமும் அவர்களிடம் போய் கெஞ்சி தண்ணீர் கொடுங்கள், தண்ணீர் கொடுங்கள் என கேட்க வேண்டுமா? என்ன நம்மிடம் ஆட்சி இல்லையா? நிர்வாகத் திறன் உள்ள அதிகாரிகள் இல்லையா? ஆட்சியாளர்கள் இல்லையா? பண பலம் இல்லையா? என்ன இல்லை. ஏன் ஒவ்வொரு முறையும் மழைக்காலம் வரும்பொழுது கடலில் தண்ணீரை கலப்பது, கோடை காலம் வந்தவுடன் தண்ணீர் இல்லை என்பது, கர்நாடகாவிடம் காவிரியில் தண்ணீர் கொடுங்கள் எனக் கேட்பது என இன்னும் எத்தனை நாளைக்கு தான் இதே பாணியைத் தான் இவர்கள் ஓட்டப் போகிறார்கள்.

ஏற்காட்டில் நேற்று சுற்றுலா போன பஸ் பாதாளத்தில் விழுந்து ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள். தேமுதிக சார்பில் அறிக்கை கொடுத்திருக்கிறோம். ஏன் இந்த குளறுபடிகள். சம்மர் வந்தால் மலைப் பிரதேசங்களுக்கு செல்வது எல்லாருக்கும் வழக்கம். அப்போது உரிய பாதுகாப்பு தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை. மலைப்பகுதிகளில் திறமையான பேருந்து ஓட்டுநர்களை அமைக்க வேண்டும். மதில் சுமர்கள் இரண்டு பக்கமும் ஏற்ற வேண்டும். பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தர வேண்டியது அரசினுடைய கடமை. காவல்துறையின் கடமை.  ஏழு உயிர் போய் இருக்கிறது. இதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்கள்? முதல்வர் பொறுப்பேற்றுக் கொள்வாரா? அவர்களுக்கு உரிய சன்மானத்தையும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் தர வேண்டும். இந்த நிகழ்வு இனி எங்கும் நடக்காமல் இருக்க வேண்டும். ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு என எல்லா இடத்திற்கும் தான் மக்கள் போவார்கள். அந்த பாதை சரியாக இருக்கிறதா.. பேருந்து சரியாக இருக்கிறதா... ஓட்டுநர்கள் சரியாக இருக்கிறார்களா? என சோதனை செய்து அனுப்ப வேண்டியது அரசின் கடமை''என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டித் திட்டம்; மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர்

Published on 15/07/2024 | Edited on 16/07/2024
 Minister Anbil Mahesh having breakfast with students

தமிழக முதல்வரின் கனவு திட்டமான காலை சிற்றுண்டி திட்டத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதிக்கு உட்பட்ட அசூர் ஊராட்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் திட்டத்தினை துவக்கி வைத்தார். 

தமிழக முதல்வர் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும் இதனை அடுத்து தமிழக முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர்  காலை சிற்றுண்டி திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் சட்டமன்ற  உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அசூர் ஊராட்சியில் ஸ்ரீ முருகன் அரசு உதவி பெறும் பள்ளியில் திட்டத்தினை துவக்கி வைத்தார். இப்பள்ளியில் 64 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்நிகழ்வில்  மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், தலைமை ஆசிரியர் சுமதி உட்பட  மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, தாசில்தார் ஜெயபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன் ஸ்ரீதர் , தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், அசுர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி குமரகுரு உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

'இதுதான் எங்கள் தேர்தல் வெற்றியின் ரகசியம்' - முதல்வர் பேச்சு  

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
'We must not lose sight of any place' - Chief Minister's speech

தர்மபுரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் சென்றுள்ள நிலையில் 'மக்களுடன் முதல்வர் திட்டம்' தமிழக முதல்வரால் தர்மபுரியில் உள்ள ஊரகப் பகுதிகளில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நிகழ்வாக 445 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். தர்மபுரி - திருவண்ணாமலையில் நான்கு வழிச் சாலை, அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற பணிகளை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். பெண்களுக்கான 20 பேருந்துகளையும் தமிழக முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார். 56 கோடி ரூபாய் மதிப்பில் 2,637 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் வழங்கவுள்ளார்.

தொடர்ந்து தர்மபுரியில் திட்டங்களை துவக்கி வைத்த பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், ''ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள் இருக்கக்கூடிய எல்லா காரியங்களையும் நிறைவேற்றிக் காட்டுவேன் என்று சொன்னேன். உங்கள் முன்னாடி அந்தப் பெட்டியை பூட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் பாதுகாப்பாக வைத்தோம். உடனடியாக எதிர்க்கட்சிகள் என்ன பேசினார்கள் 'இவர்கள் ஆட்சிக்கும் வரப்போவதில்லை; இந்த பெட்டியையும் திறக்கப் போவதில்லை' என்று இறுமாப்பில் கேலி செய்தார்கள், கிண்டல் செய்தார்கள். ஆனால் பொதுமக்களாகிய நீங்கள் திமுக மேல், என் மேல் நம்பிக்கை வைத்து அந்த கேலி மனிதர்களை தோற்கடித்து எங்களுக்கு பெரிய வெற்றியை தேடித் தந்தீர்கள்.

nn

ஆட்சிக்கு வந்ததும் உங்களுடைய மனுக்களை கவனிப்பதற்காக ஒரு புதிதாக ஒரு துறையை உருவாக்கினேன். அந்த துறையினுடைய பெயர் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்னிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் துறைவாரியாக பிரித்து அதிலிருந்து நடைமுறை சாத்தியமுள்ள 2, 29216 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டுள்ளோம். மக்கள் வைத்த கோரிக்கைகளில் சாத்தியம் உள்ள அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தலுக்கு முன் வாங்கிய மனுக்களுக்கு தீர்வு கண்டதுடன் எங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கவில்லை. இனிமேல் தான் கடமை தொடங்குகிறது என நினைத்து உழைப்பை கொடுக்கிறோம்.

அதனால்தான் தொடர்ந்து மனுக்களை வாங்கி வருகிறோம். அதை முறைப்படுத்த வேண்டும். எப்படி எல்லாம் முறைப்படுத்த வேண்டும் என்று சொன்னால் முதலமைச்சருடைய தனிப்பிரிவு; முதலமைச்சரின் உதவி மையம்; ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை அமைப்பு; உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து 'முதல்வரின் முகவரி' என்ற ஒரு புதிய துறையை உருவாக்கினோம். பொது மக்களுடைய கோரிக்கைகள் எந்த இடத்திலும் எங்களுடைய பார்வையில் இருந்து தவறி விடக்கூடாது என்பதற்காகத் தான் இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தோம். முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்படக்கூடிய மனுக்கள் மட்டுமல்லாமல், இணையதளம், அஞ்சல், சமூக வலைத்தளம், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பெறப்படும் மனுக்கள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுக்கப்படும் மனுக்கள் இப்படி எல்லாம் மனுக்களையும் ஒரே இடத்தில் போய் சேருகிறது. மக்களால் தரப்படும் அனைத்து மனுக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தோம். எல்லா மக்களின் கோரிக்கைகளும் தலைமைச் செயலகத்திற்கு வந்து விட்டது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் 'முதல்வரின் முகவரி' துறையின் கீழ் இப்பொழுது வரைக்கும் பெறப்பட்ட 68,30,281 மனுக்களில் 66,65, 304 மணிகளுக்கு உரிய முறையான தீர்வு கண்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தோல்வியை கண்ட பிறகும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்பட வேண்டும். அனைவர் வீட்டிற்கும் ஏதோ ஒரு வகையில் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பணியாற்றி வருகிறோம். எல்லோருக்குமான அரசாக இருப்பது தான் எங்கள் தேர்தல் வெற்றியின் ரகசியம்'' என்றார்.