Skip to main content

பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி பாய்க்கு இரண்டரை ஆண்டுகள் ஜெயில்!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

பீட்சாவில் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு எச்சில் துப்பி பீட்சாவை டெலிவரி செய்தவருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் எஸ்கிபார்க் பகுதியை சேர்ந்தவர் ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு சாப்பிடுவதற்காக பீட்சா ஆர்டர் செய்துள்ளார்.  ஆர்டரை பெற்றுக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் தங்களின் டெலிவரி பாய்-யை குறிப்பிட்ட அட்ரஸ்க்கு பீட்சா டெலிவரி செய்ய அனுப்பியுள்ளது. 
 

cg



ஆனால் டெலிவரி செய்ய வந்த இளைஞர் குறிப்பிட்ட அட்ரசுக்கு வந்து, மாடியின் கிழே நின்று பீட்ஸாவை திறந்து அதில் எச்சில் துப்பியுள்ளார். இதை ஆர்டர் செய்தவர் சிசிடிவி காட்சியின் வழியே பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலிசில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இதுதொடர்பாக மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி பீட்சாவில் எச்சில் துப்பியவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்