Skip to main content

''2026ம் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டும்''-அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

Published on 01/01/2025 | Edited on 01/01/2025
"We must win the 2026 assembly elections" - Minister Periyasamy's speech

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மாநில கழக துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து சொல்ல திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆகியோர் திண்டுக்கல் நகரில் உள்ள அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை முதல் தன்னை சந்தித்து தனக்கு வாழ்த்து சொன்ன திமுக நிர்வாகிகளிடமிருந்து வாழ்த்துக்கள் மற்றும் சால்வைகளை பெற்ற பின்பு தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ''வரும் 2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் வந்துவிடும். இந்த புத்தாண்டில் இருந்து அதற்கான பணிகளை ஒவ்வொருவரும் தொடங்க வேண்டும். கலைஞர் வழியில் வந்த திராவிட மாடல் ஆட்சி நாயகன் கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை பலப்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை இலக்காக வைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்து புத்தாண்டு முதல் தேர்தல் பணி ஆற்றுங்கள். உங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுங்கள் அதற்கான முழு ஒத்துழைப்பும் தர நான் தயாராக உள்ளேன். அதுபோல் ஆத்தூர் தொகுதியில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகள் முடிவடைந்த உடன் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும், கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடுகள் வழங்கப்படும் என்று கூறினார்.

இந்த புத்தாண்டை முன்னிட்டு  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மாவட்ட எஸ்.பி. பிரதீப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குநர் ஜெயசந்திரன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவரும், ஒன்றிய கழக செயலாளருமான ப.க.சிவகுருசாமி உட்பட பலர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதன்பின்னர் தொடர்ச்சியாக திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடர்ந்து அமைச்சருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். நிகழ்ச்சியின்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆ.நாகராஜன், மாவட்ட திமுக பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆத்தூர் நடராஜன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, திமுக பிரமுகர் அம்பை ரவி,  மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்கள் கும்மம்பட்டி விவேகானந்தன், பஞ்சம்பட்டி மணி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் சகிலாராஜா, கன்னிவாடி தனலட்சுமி சண்முகம், அய்யம்பாளையம் ரேகாஅய்யப்பன், நத்தம் பேரூராட்சி மன்றத்தலைவர் கே.எஸ்.எஸ்.எம்.ஷேக் சிக்கந்தர் பாட்ஷா, ஊராட்சி மன்றத்தலைவர் கொத்தப்புள்ளி சுந்தரி அன்பரசு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பண்ணைப்பட்டி அருண், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் அக்பர், டென்னி, திண்டுக்கல் மாநகர பகுதி செயலாளர்கள் பஜ்ருல்ஹக், ராஜேந்திரகுமார்,  மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ், அகரம் பேரூராட்சி மன்ற தலைவர் மணி (எ) நந்தகோபால் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்