Skip to main content

கரூரில் வீடுகளுக்குள் வெள்ளநீர்!!...(படங்கள்)

Published on 16/08/2018 | Edited on 27/08/2018

 

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அனைவரும் முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுருக்கிறார்கள் கரூர் மாவட்டத்தில் காவிரி நதியானது நொய்யல், சேமங்கி, எல்லக்கல்மேடு, நடையனூர், கோம்புபாளையம், நத்தமேட்டுப்பாளையம், கட்டிப்பாளையம், தவிட்டுப்பாளையம், நன்னியூர், செவ்வந்திப்பாளையம், வாங்கல், அரங்கநாதன்பேட்டை ஆகிய வழிகளாக சென்று திருமுக்கூடலூரில் உள்ளிட்ட பகுதிகளை கடந்து அமராவதியில் கலக்கிறது.

 

 

இந்த நிலையில், தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்யும் கனமழையை காரணமாக மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நீர் முற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது.  இதனால்  தவிட்டுப்பாளையம், செவ்வந்திப்பாளையம், மல்லம்பாளையம், அரங்கநாதன்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கிராமங்களின் இருக்கும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.  

300-க்கு ம் மேற்பட்ட வீடுகள் மூழ்கிய நிலையில், அவர்களை பத்திரமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்