Skip to main content

'பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்'-அதிகாரிகள் விசாரணை

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

 'Vomiting in students who ate lunch at school'-authorities investigation

 

கடலூரில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட 25 மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள அத்தியாநல்லூர் என்ற கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவரும்  இந்த பள்ளியில் இன்று மதியம் வழக்கமாக எப்பொழுதும் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. முட்டையுடன் மதிய உணவு வழங்கப்பட்ட நிலையில் மதிய உணவை சாப்பிட 25 மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து மாணவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து தகவலறிந்த புதுசத்திரம் போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மதிய உணவில் வழங்கப்பட்ட முட்டை அழுகி போய் காலாவதியான நிலையில் இருந்ததாக அக்கிராம மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இருப்பினும் இது முட்டையால் ஏற்பட்ட பாதிப்பா? அல்லது உணவினால் ஏற்பட்ட பாதிப்பா? என்பது குறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்