Skip to main content

குழந்தை கடத்த வந்ததாக நினைத்து இந்தி பேசிய இளைஞருக்கு சரமாரி தாக்குதல்

Published on 29/06/2018 | Edited on 29/06/2018

குழந்தை கடத்த வந்ததாக நினைத்து இந்தி பேசிய இளைஞரை பிடித்து அடித்து உதைத்தனர். போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் உள்ள ஆவூர் அருகே உள்ள மதயாணைப்பட்டி கிராமத்தில் நேற்று மாலை குழந்தை கடத்த வந்ததாக நினைத்து ஒரு இந்தி மொழி பேசும் நபரை பிடித்த அப்பகுதி இளைஞர்கள் விசாரித்தனர் அவர் இந்தியில் பேசியது புரியாத நிலையில் அந்த நபரை மாலை  நான்கு மணியில் இருந்து அடித்து உதைத்துள்ளனர்.
 

The volunteer attacked the youth who spoke Hindi thinking that the kid was kidnapped


 

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களிடம் இருந்து தாக்குதலுக்கு உட்பட்ட நபரை  மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் அனுப்பி வைத்தார்.

இலுப்பூர், அன்னவாசல் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவிய வதந்தியால் இன்று காலை வடமாநில தம்பதியை பொதுமக்கள் பிடித்து இலுப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் மாலை ஒரு நபரை பிடித்து அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்