Skip to main content

அலட்சியம் கருதாமல் மிக எச்சரிக்கையோடு அதிகாரிகள், அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்: அமைச்சர் சண்முகம் 

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோய் பரவாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவது சம்பந்தமாக அதிகாரிகளுடன் அமைச்சர் சண்முகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

  gggg


கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசும்போது, “விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ள 23 நபர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டம் மிக முக்கியமானது. 21 நாட்கள் கடந்து விட்டாலும்கூட இனிமேல் பயமில்லை என்று அலட்சியம் கருதாமல் இனிவரும் காலகட்டத்தில் மிக எச்சரிக்கையோடு அதிகாரிகள், அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். அரசு உத்தரவுகளை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும். தனிப்பட்ட யாரிடமும் பரிவு காட்டக்கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். அங்கு பாதுகாப்பு பணிகளை தீவிமாக கண்காணிக்க வேண்டும். 

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும். அவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் மாவட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை தடையின்றி நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். 
 

nakkheeran app



வியாபாரிகள் வெளியூர் சென்று பொருட்களை கொள்முதல் செய்துகொண்டு வருவதற்கு ஏதுவாக அவர்களுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தற்போது பாஸ் வழங்கும் முறை உள்ளது அந்த நிபந்தனைகளை வியாபாரிகளிடம் எடுத்துக் கூறி அவர்கள் எளிதாகச் சென்று காய்கறி மளிகை பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்ய வழிவகை ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல் ஊரக வேலை திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் மக்கள் கூட்டமாக சேராமல் சமூக விலகலிலிருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மூலம் கிராம ஊராட்சி செயலாளர்கள் பணித்தள பொறுப்பாளர்களுக்கு உரிய அறிவுரைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துக் கூற வேண்டும். விழுப்புரம் நகராட்சி மருத்துவமனையில் 18 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் மூன்று பேர்கள் மட்டுமே இருக்கிறார்கள். எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிசெய்யும் கூடுதல் டாக்டர்கள் உள்ள இடங்களிலிருந்து நகராட்சி மருத்துவமனைக்கு டாக்டர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் தங்கும் அறை உள்ளிட்ட வசதிகளை குறைவின்றி செய்து தரப்பட வேண்டும். ஏனென்றால் நகரப் பகுதிதான் நோய் பாதிப்பு உள்ளது. தற்போதைய பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் சளி இருமல் உள்ளவர்கள் அதிகமான அளவில் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு நகராட்சி ஆணையர் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்த சிரமமுமின்றி அரசு திட்டங்கள் அனைத்தும் சென்றடையும் வகையில் அனைத்து அதிகாரிகளும் அலுவலர்களும் ஊழியர்களும் சிரமங்களை பொறுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.” இவ்வாறு கூறினார்.

 

சார்ந்த செய்திகள்