Skip to main content

கல்விக் கூடமா? காதல் கூடமா? விஜயகாந்த் - புவனேஷ்வரி காதலுக்கிடையே வந்த டீச்சருக்கு பளார்!!!

Published on 18/07/2018 | Edited on 18/07/2018



விஜயகாந்த்தை காதலித்த புவனேஸ்வரியும், தமிழ் மகளும் கட்டிப்புரண்டு சண்டை போட்டதை மாணவர்களும், ஊர் மக்களும் வேடிக்கை பார்த்து பரபரப்பானதும், ஆசிரியர்கள் 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

விழுப்புரம் மாவட்டம், இலவாசனுர் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த விஜயகாந்த் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் புவனேஸ்வரி என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். விஜயகாந்த்தும், புவனேஸ்வரியும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இதே பள்ளியில் புவனேஸ்வரியின் தோழி தமிழ் மகள் என்பவரும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 
 

 

 

விஜயகாந்த் - புவனேஸ்வரி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில நாட்களாக இருவரும் பேசிக்கொள்வதில்லை. இருவரும் பேசிக்கொள்ளாததை தனகக்கு சாதகமாக்கிக்கொண்டார் தமிழ் மகள். விஜயகாந்த்துடன் நெருங்கி பழக ஆரம்பித்தார் தமிழ் மகள். ''நான் அவளைப்போல் இல்லை. நான் எப்படி, எனது குடும்பம் எப்படி என்று உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை. இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம், இரண்டு சம்பளம், நிம்மதியாக வாழலாம்'' என்று கூறி நெருங்கி பழகியிருக்கிறார் தமிழ் மகள்.
 

தமிழ் மகளின் அணுகுமுறையை கேள்விப்பட்ட புவனேஸ்வரிக்கு விஜயகாந்த் மீதும், தமிழ் மகள் மீதும் கோபம் ஏற்பட்டது. ''இன்னைக்கு நமக்குள்ள கோபம் வந்திருக்கலாம், நாளைக்கு நாம சமாதானமாகிடலாம், அதுக்காக ஏன் தமிழ் மகளிடம் நெருக்கம் வச்சிக்கணும்? வேண்டாம் விட்டுடுங்கன்னு'' விஜயகாந்திடம் சொல்லியிருக்கிறார் புவனேஸ்வரி. இதேபோல், தமிழ் மகளையும் எச்சரித்துள்ளார்.
 

school


இந்த நிலையில கடந்த 16ஆம் தேதி பள்ளியில் விஜயகாந்த்தும், தமிழ் மகளும் நெருங்கி பேசி வருவதை பார்த்த புவனேஸ்வரி கோபத்தின் உச்சிக்கே சென்றார். தமிழ் மகளிடம் வாக்குவாதம் செய்தார். கட்டிப்புரண்டு சண்டை நடந்தது. இதனை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வேடிக்கை பார்த்தனர். அந்த வழியே சென்ற பொதுமக்களும், மாணவர்களின் பெற்றோர்களும் வேடிக்கை பார்த்தனர். அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் அனுப்பினர்.
 

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருவரையும் சமாதானப்படுத்தினர். அதற்குள் புவனேஸ்வரி தனது உறவினர்களுக்கு தகவல் அனுப்பினார். புவனேஸ்வரியுன் உறவினர்கள் சுமார் 50 பேர் விரைந்து வந்ததுடன், விஜயகாந்த்தையும் புரட்டி எடுத்தனர்.
 

 

 

மாவட்ட முதண்மை கல்வி அலுவலர் முனுசாமிக்கு இந்த தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அவருடைய உத்தரவின் பேரில் உதவி தொடக்க அலுவலர் நீலாம்பாள், தலைமை ஆசிரியர் ஐயூப்கான் தலைமையில் விசாரணை நடந்தது. கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியது அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணைக்குப் பின்னர் 3 ஆசிரியர்களும் வெவ்வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். 
 

இதற்கிடையே மாணவர்களின் பெற்றோர், கல்வி அதிகாரிகளை சூழ்ந்தனர். ''இது என்ன கல்விக் கூடமா? காதல் கூடமா? பாடம் சொல்லிக்கொடுக்கத்தான் ஆசிரியர்களக்கு கொத்து கொத்தாக சம்பளம் தருகிறது அரசு. இவர்கள் காதல் செய்யத்தான் இந்த அரசு கொத்து கொத்தாக சம்பளம் தருகிறதா? இவர்களது நடவடிக்கையை பார்த்தால் இவர்கள் 3 பேரும் பாடம் நடத்தவில்லை. அரசு பணத்தில் காதல் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். 3 பேரையும் இடமாற்றம் செய்வது தண்டனை அல்ல. அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் மற்ற ஆசிரியர்களுக்கு பாடமாக இருக்கும்'' என்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களையும், மாணவர்களின் பெற்றோர்களையும் போலீசார் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

 

சார்ந்த செய்திகள்