Skip to main content

போதையில் வீடுகளில் புகுந்த வடமாநிலவாலிபரை பொதுமக்கள் தாக்கியதால் உயிர் இழந்தார்

Published on 27/11/2018 | Edited on 27/11/2018
c

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் 35 வயது மதிக்க தக்க  வடமாநில வாலிபர் ஒருவர் குடிபோதையில் சிதம்பரம் நகரத்தில் உள்ள எடத்தெரு, நாட்டு தெரு, காசுகடை தெரு உள்ளிட்ட பகுதியில் வீடுகளில் புகுந்துள்ளார். இவரை விரட்டியபோது தப்பித்துள்ளார். பின்னர் காசுகடை தெரு பகுதியில் நின்றுகொண்டிருந்த கார் டிக்கியை திறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அவனை பிடித்து தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

இதுகுறித்து சிதம்பரம் காவல்துறையினர் கூறுகையில், இவன் மனநலம் பாதிக்கப்பட்டது போல் போதையில் சிதம்பரம் நகரத்தில் மூன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் புகுந்துள்ளான். இவனை பிடிக்க அந்த பகுதிகளில் உள்ளவர்கள் முயற்சித்த போது தப்பியுள்ளான். கடைசியாக காசுகடைதெருவில் காரின் டிக்கியை திறக்க முயற்சித்த போது அங்கிருந்தவர்கள் இவன் தான் எல்லா வீட்டிலும் புகுந்து தகாத செயல்களில் ஈடுபடுகிறான்.  திருடன் திருடன் என கத்தியதால் அங்கிருந்த 10க்கும் மேற்பட்டவர்கள் அவனை தாக்கியதால் உயிர் இழந்துள்ளார். 

 

இறந்தவர் குறித்து சரியான தகவல் இல்லை.  இந்த பகுதியில் வசிக்கும் வடமாநில வாலிபர்களிடம் இது குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது. வாலிபரை தாக்கிய ரமேஷ், மாரி, பலராமன், சண்முகம் உள்ளிட்டவர்கள் மீது 304(2) (கொலை செய்யும் நோக்கில் தாக்குல் இல்லை)என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரனை நடைபெற்று வருகிறது.

 
 

சார்ந்த செய்திகள்