இந்திய அரசியலில் அதிமுகவும் பாஜகவும் இரட்டைகுழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா'வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியதாவது,
கடைசி வரைக்கும் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, பாஜகவை தூரத்தில் வைத்துதான் அரசியல் செய்து கொண்டு இருந்தார். என்றைக்கு தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் என்ற அரசு, அதிமுகவையும் பாஜகவையும் இரட்டைகுழல் தூப்பாக்கி என்கிற அளவில் அரசியல் செய்ய தொடங்கினர்களோ, அப்போதிலிருந்தே தமிழக மக்கள் மனதில் இருந்து ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க. அணி முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது.
தமிழக அரசியல் களத்திலிருந்து முற்றிலுமாக தங்களை தங்களே அழித்துக் கொள்வதற்கு அவர்கள் எடுத்த முடிவுதான் பாஜகவுடன் இனக்கமாக செல்வது. இரட்டைகுழல் தூப்பாக்கி போன்ற வார்த்தைகள் வெளியிடுவதுதன் மூலம் அ.தி.மு.க கொஞ்சநெஞ்சம் தமிழக மக்களிடம் இருந்த செல்வாக்கையும் இழக்க நேரிட்டது. இவ்வாறு கூறியுள்ளார்.