Skip to main content

விளையாட்டு மைதானமாக மாறிய வீராணம் ஏரி!! விவசாயிகள் கண்ணீர்

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

கடலுார் மாவட்ட டெல்டா பாசன பகுதி விவசாயிகளின் உயிர் நாடியாகவிளங்கிய வீராணம் ஏரி 

தற்போது விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் இந்த ஏரி மூலம் 70  ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும், சென்னை மாநகர மக்களின்தாகத்தையும் 

தீர்த்து வருகிறது.

LAKE

 

 

 

கடந்த 4 ஆண்டுகளாக சரியான மழை இல்லாததால் ஏரியில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தது வந்தது. கடந்த 5. மாதங்களுக்கு முன்பு வரை அவ்வபோது பெய்யும் மழையால் ஏரியில் சில பள்ளமான இடங்களில் தண்ணீர் இருந்து வந்தது. அதன் பிறகு கடுமையான வறட்சி மற்றும் மேட்டூர் அணையில்போதிய அளவு தண்ணீர் இல்லாததால், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. அதனால்  தற்போதைக்கு வீராணத்திற்கு தண்ணீர் வருவதற்கான வாய்ப்பு இல்லை. எப்பழுதும் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரி, தற்போது தண்ணீர் வரத்தின்றி  வரண்ட நிலமாக உள்ளது அதனால் காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள்கால்பந்து, கைப்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளை தினமும் விளையாடி வருகிறார்கள்.

LAKE


காவிரிடெல்டாவின் கடைமடைபகுதி விவசாயிகளின் உயிர் நாடியாக இருந்து இந்த பகுதி மக்களின் வாழ்வாதரத்தை காத்து வந்த இந்த ஏரி விளையாட்டு மைதானமாக மாறி விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதை சாலையில் செல்லும் போது பார்த்து செல்லும் சில விவசாயிகள் கண்ணீர் கலங்கியவாறே செல்வதை ஒரு மணி நேரம் இந்த இந்த ஏரிகரை சாலையில் அமர்ந்து பார்த்தால் தெரியும்.

மேலும் மழைகாலங்களில் ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை இந்த பகுதியில் உள்ள விவசாய தேவைக்கு பிறகே சென்னை குடிநீருக்கு அனுப்பவேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகளோ சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக மட்டுமே செயல்படுத்துகிறார்கள் என்று வீராணம் ஏரி பாசன விவசயிகள் சங்க தலைவர் பாலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்டதுணைச்செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.  

சார்ந்த செய்திகள்