Skip to main content

'வருமுன் காப்போம் திட்டம்' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! (படங்கள்)

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இன்று (29/09/2021) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது, ‘வருமுன் காப்போம்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். அத்துடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ கண்காட்சியைப் பார்வையிட்ட முதலமைச்சர், மருத்துவ முகாம்களையும் பார்வையிட்டார். 

 

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். பார்த்திபன், டாக்டர் பொன். கௌதம் சிகாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. ராஜேந்திரன், இரா. அருள், எஸ். சதாசிவம், தேசிய நல்வாழ்வுக் குழும இயக்குநர், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

2006ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் ‘வருமுன் காப்போம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1,250 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஏழை, எளிய மக்களை நோய் பாதிப்பிலிருந்து முன்கூட்டியே தடுக்கும் நோக்கில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்