Skip to main content

"புதிய அமைச்சரவை- நாட்டிற்கு ஆகப்போவதென்ன?"- கமல்ஹாசன் கேள்வி!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021

 

union cabinet expansion makkal needhi maiam party kamalhaasan tweet


டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் புதிய மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழா இன்று (07/07/2021) மாலை 06.00 மணிக்கு நடைபெற்றது. இதில், 43 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

 

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநயாகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள்  உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

 

இந்நிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும். 

 

ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்