" ஏய்..! நீ ரொம்ப அழாக இருக்கே.! என்னை கிறங்கடிச்சுட்டே.! ஐஸ்கிரீமை உருக வைச்சு உறிஞ்சு சாப்பிடுவதைப் போல உன்னை சாப்பிடனும்.! எப்ப உன்னைத் தருவே..? வா.! ஜாலியாக ஐஸ்கிரீம் சாப்பிடலாம்." என இரட்டை அர்த்தத்தில் பேசி அழைத்ததும், " எனக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்கு.. நீ.! உம் பொண்டாட்டியை விட்டுட்டுப் போயிடனும்." என புருஷனை மிரட்டியதும் இரு வேறு புகார்களாக தட்டார்மட இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது பாய கிடுகிடுத்துள்ளது தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை.
கடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்த கான்ஸ்டபிள் மனைவி அட்லின் ரேபாவோ, " மளிகைக் கடைக்கு சென்ற என்னை வழிமறித்து " கலரா அழகா இருக்க.! உன்னை வைச்சி அவனுக்கு வாழத்தெரியலை..! உன்னை பார்த்த நாள் முதல் என்னைக் கிறங்கடிச்சுட்டே இருக்கே.! ஐஸ்கிரீம் பார்த்திருப்பிலே.! ஐஸ்கிரீமை உருக உருக வைச்சு உறிஞ்சி சாப்பிடுவதை போல உன்னை சாப்பிடனும். என் போன் நம்பரை வாங்கிக்கோ.! பேசு. சாப்பிடுவோம்." என பேசிக்கொண்டே போனார் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன். பொறுக்காத நானும் எஸ்.பி.ஆபிஸில் புகார் செய்துள்ளேன்." என்றார் அப்பொழுது.!
அதன் பின் அந்த புகார் கிடப்பில் இருந்த நிலையில் தற்பொழுது, " என்னுடைய மனைவி தனலெட்சுமிக்கும் இன்ஸ்பெக்டர் கஜேந்திரனுக்கும் கள்ளத் தொடர்பு உள்ளது. கணையம் பாதிக்கப்பட்ட நான் இது குறித்து அவளிடம் கேள்விக் கேட்டேன். பதிலில்லை. அவளும், இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் பேசியதையும் போனில் ரெக்கார்டு செய்து வைத்திருந்தேன். இது தெரிந்த இன்ஸ்பெக்டர் என்னுடைய செல்போனை வாங்கி அதனை அழித்து விட்டு, மிரட்டி அனுப்பினார். ஆனால் இது நடக்கும் முன்பே எனக்குத் தெரிந்ததால் என்னுடைய சித்தப்பா, சித்தியிடம் கொடுத்து வைத்திருந்தேன். அதனைத் தெரிந்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் சித்தப்பா நயினார் மீதும் சித்தி ஜெயக்கொடி மீதும் பொய்யாக வழக்குப் பதிவு செய்து மிரட்டுகின்றனர். அவரின் பிடியிலிருந்து என்னுடைய மனைவியை மீட்டு எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்." என சாத்தான்குளம் துணைக்காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அனுப்பியுள்ளார் வள்ளுவர் தெரு, சாத்தான்குளம் தாமரை மொழியை சேர்ந்த ஜெகதீசன்.
இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் பெண்கள் விவகாரத்தில் சபலிஸ்டு என்கிறது முந்தைய ரெக்கார்டுகள்.! டி.எஸ்.பி.யாக வேண்டியவர் இப்பொழுது வரை இன்ஸ்பெக்டராக இருக்கின்றார். பணியினை துஷ்பிரயோகம் செய்ததாக காவல்துறையில் அவர் மீது போடப்பட்ட 3பி மெமோக்கள் மட்டும் மொத்தம் 6. இதற்கு முன் ராமநாதபுரம் மண்டபம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பொழுது பிரபல கஞ்சா வியாபாரியான ஜெகதீஷ் மற்றும் கண்மணி தம்பதியினர் மீது நெருக்கம் இவருக்கு. மாத மாமூலுக்குப் பதில் தினசரி மாமூலாக கண்மணியிடம் உடலைப் பெற்றுக்கொள்வதுண்டு. அப்படி ஒரு நாள் மண்டபம் போஸ்ட் ஆபிஸ் தெருவிலுள்ள கண்மணி வீட்டிற்குள் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் செல்ல, இது தான் தருணம் என்று காத்திருந்த உள்ளூர் மக்கள் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த விவகாரத்தால் அப்போதைய எஸ்.பி.மணிவண்ணன் இவரை சஸ்பெண்ட் செய்தது தனிக்கதை. இவரின் சபல புத்தியால் பாதிக்கப்படுவது என்னமோ தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை தான்.!!