Skip to main content

"தங்கியிருந்த பகுதிக்கு சாலை போட்டுத் தருகிறேன்" - நகைக் கொள்ளை முருகன்! 

Published on 11/10/2019 | Edited on 12/10/2019

அக்டோபர்- 1 ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் சுவற்றை துளையிட்டு ரூபாய் 13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். திருவாரூர் அருகே நகைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற  சுரேஷ், மணிகண்டனை காவல்துறையினர் துரத்தி சென்று பிடிக்க முயன்றன. ஆனால் சுரேஷ் தப்பிய நிலையில், மணிகண்டன் காவல்துறையிடம் சிக்கினார். சுரேஷை காவல்துறை தீவிரமாக தேடி வந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதை அடுத்து திருச்சியில் துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையிலான தனிப்படை பிரிவு செங்கம் நீதிமன்றத்திற்கு விரைந்து சென்றனர். 
 

murugan



இந்த நிலையில் பிரபல நகை கொள்ளையன் முருகன் எங்கு இருக்கிறான் என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. முருகனை பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். நகை கொள்ளையன் முருகன், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலின் பின் பகுதியில் இருக்கும் நறுங்குழல் நாயகி நகரில், கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி லலிதா ஜூவல்லரி நகைக் கடையை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வீடு எடுத்து தனியாக நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த வீட்டில் மனைவி, மகன், மகள் மற்றும் நாயுடன் வசித்து வந்திருக்கிறான் நகை கொள்ளை  முருகன். அந்த வீட்டிற்கு மாதம் 6000ரூபாயை வாடகையாகவும், அட்வான்ஸாக 60000ரூபாய் பணம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.  பின்பு அவன் குடி இருக்கும் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதை கண்ட கொள்ளையன் முருகன், அதனை சரி செய்ய அப்பகுதியினரிடம் முடிந்த அளவிற்கு பணத்தை திரட்டுங்கள், மீதம் தேவைப்படும் பணத்தை தாம் தருவதாக கூறியிருக்கிறார். கொள்ளையன் முருகன் இரண்டு கார்களில் அடிக்கடி வெளியே சென்று வந்த தகவலை அக்கம் பக்கத்தினர் மூலம் போலீசார் பெற்றிருக்கின்றனர்.


கடந்த மாதம் 29 ஆம் தேதி திடீரென குடும்பத்துனருடன் வெளியே சென்றதாக கூறப்படும் முருகன், அதன் பிறகு ஒன்றாம் தேதி வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது. அடுத்த நாளான அதாவது லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 2ஆம் தேதி இரவுக்குப் முருகன் குடும்பத்தினரை பார்க்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் கொள்ளையன் முருகன் தங்கியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் வீட்டில் சோதனை செய்துள்ளனர். மேலும் முருகன் எங்கு இருக்கிறான் என்று தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்