நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நாகை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர், என்.டி.ஆர். போன்ற ஒரு சிலரை தவிர சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்கள் யாரும் முதல்-அமைச்சராக முடியாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என்ற இலக்கோடு கட்சி தலைவர்கள் பணியாற்ற வேண்டும். பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு பொய்களை சொல்லி மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளார். அவரது பொய்களை நம்பி மக்கள் ஓட்டு போட்டு ஏமாந்து விட்டனர். மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது என்றார்.