Skip to main content

திருச்சி மாநகர் காவல் எல்லை பிரிப்பு..! 

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

Trichy city Police Boundary Separation ..!

 

திருச்சி மாநகர காவல் எல்லை பிரிவானது வடக்கு, தெற்காகப் பிரிக்கப்பட்டு, 2 துணை ஆணையர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதுவரை திருச்சி மாநகர எல்லை பிரிவானது கோட்டை, ஸ்ரீரங்கம், பொன்மலை, கண்டோன்மெண்ட் என்று 4 சரகங்களாகத் திரிந்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக கே.கே.நகர், தில்லைநகர், காந்தி மார்க்கெட் என 3 சரகங்கள் ஏற்படுத்தப்பட்டுக் கோட்டை சரகம் நீக்கப்பட்டு உள்ளது.

 

தில்லைநகர் சரகம்: தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை


காந்தி மார்க்கெட் சரகம்: காந்தி மார்க்கெட், பாலக்கரை, கோட்டை மகளிர், வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு


கே.கே.நகர் சரகம்: கே.கே.நகர், ஏர்போர்ட், தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு 

 

இதனால் ஏற்கனவே உள்ள சரகம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி கண்டோன்மெண்ட் சரகம்: கண்டோன்மெண்ட், கண்டோன்மெண்ட் மகளிர், செஷன்ஸ் கோர்ட், எடமலைப்பட்டி புதுார், NH ரோந்து பிரிவு


பொன்மலை சரகம்: பொன்மலை, பொன்மலை மகளிர், அரியமங்கலம்


ஸ்ரீரங்கம் சரகம்: ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் மகளிர், கோட்டை 
 

தற்போது சிட்டியில் இருந்த 4 குற்றப்பிரிவு உதவி ஆணையர்கள் பதவி ரத்து செய்யப்படுகிறது. இதனால் திருச்சி மாநகரில் இதுவரை இருந்து வந்த 5 உதவி ஆணையர்கள் பதவி இடம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாகத் தமிழக தலைமைச் செயலகத்தின் உள்துறை கூடுதல் செயலாளர் பிரபாகரன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த அறிக்கையில் “இனி திருச்சி மாநகர வடக்கு மற்றும் தெற்கு எனப் பிரித்து வடக்கு மாநகரத்திற்கு ஒரு துணை ஆணையர், தெற்கு மாநகர் அதற்கு ஒரு துணை ஆணையரும் என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு அந்தந்த துணை ஆணையர்களுக்கான அதிகாரம் உச்சவரம்பு குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகர வடக்கு துணை கமிஷனருக்கு கண்டோன்மெண்ட், பொன்மலை, கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி கமிஷனர்களின் போலீஸ் சரகமும், மாநகர உதவி கமிஷனர் ஆயுதப்படை, உதவி கமிஷனர் நிலகரிப்புப்பிரிவு, மாநகர நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனர், மாநகர மதுலவிலக்குப்பிரிவு ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.  

 

திருச்சி மாநகர தெற்கு துணை கமிஷனருக்கு  கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு உதவி கமஷனர், பொன்மலை குற்றப்பிரிவு உதவி கமிஷனர், கோட்டை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் மற்றும் ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் சரக பகுதிகளும், மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புபிரிவு உதவி கமிஷனர், நாய்கள் துப்பறிவுப்பிரிவு உள்ளிட்டவை அடங்கும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்