Skip to main content

திருமணத்தில் முடிந்த திருநங்கையின் காதல்! -முன்னேற்றத்தை நோக்கி மூன்றாம் பாலினம்!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

Transgender love ended in marriage

 

 

‘இந்து திருமணச் சட்டத்தில் மணப்பெண் என்ற சொல், பெண்ணை மட்டுமின்றி, பெண்ணாக மாறியவரையும் சேர்த்தே குறிக்கிறது..’

 

-வழக்கு ஒன்றில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு,  ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் கூறப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டியிருந்தது. 

 

அந்த வழக்கு இதுதான் - 

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய ஸ்ரீஜாவும், அருண்குமார் என்பவரும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்,  தூத்துக்குடியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்தத் திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய விண்ணப்பித்தபோது, அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில்,  ‘இந்து திருமணச் சட்டம் பிரிவு 5-ன் கீழ், மணப்பெண் என்றால், திருமணம் செய்துகொள்ளும் பெண்ணை மட்டுமே குறிக்கும்’ என்ற அரசு தரப்பு வாதம் நிராகரிக்கப்பட்டது. மணப்பெண் என்றால், பிறப்பிலேயே பெண்ணாக பிறந்தவர் மட்டுமே என நிலையாகவும், மாற்ற முடியாத வகையிலும் பொருள் கொள்ளமுடியாது என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.  

 

Transgender love ended in marriage

 

தற்போது விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகிலுள்ள வலையங்குளத்தில்,  ஹரினா என்ற திருநங்கையை, அவரது தாய்மாமன் மகன் கருப்பசாமி, கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார்.  முதலில் பெற்றோர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், பிறகு இருவரது தீவிர காதலை ஏற்று, திருமணத்துக்கு  சம்மதித்துள்ளனர். 

 

இருவீட்டார் ஒப்புதலுடன், காரியாபட்டியிலுள்ள சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், ஹரினா – கருப்பசாமி திருமணத்தை, உறவினர்களுடன், அப்பகுதியிலுள்ள திருநங்கைகளும் இணைந்து நடத்தி வைத்துள்ளனர். 

 

ஹிஜிரா, கின்னர், கோதி என மூன்றாம் பாலினத்தவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே, திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு தனிநபர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றமும் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஜோயிடா மொண்டல் என்ற திருநங்கை,   இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதியாக முடிந்திருக்கிறது. காரியாபட்டியில் நடந்த திருமணம் போன்ற சடங்குகளில் மட்டுமல்ல, சமூகத்தாலும் முழுமனதோடு, திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.