Skip to main content

விருத்தாசலத்தில் பாரம்பரிய ரகங்கள் மற்றும் உணவு திருவிழா

Published on 16/10/2022 | Edited on 16/10/2022

 

உலக உணவு தினத்தை முன்னிட்டு, வேளாண்மை உழவர் நல துறையின்  'அட்மா' திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை சார்பில் பாரம்பரிய ரகங்களின் வேளாண் திருவிழா நடைபெற்றது.

 

இவ்விழாவில் வேளாண்மை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். வேளாண்மை துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் வரவேற்றார். வேளாண்மை துணை இயக்குனர்கள் பிரேம் சாந்தி, பூங்கோதை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் பிரேமலதா, மாவட்ட விற்பனை குழு செயலாளர் விஜயா, வேளாண்மை உதவி இயக்குனர் ஜானகிராமன், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், கடலூர் கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் சிலம்பரசன், அட்மா திட்ட மேலாளர் உமா மகேஸ்வரி, வேளாண் அறிவியல் நிலைய நுண்ணுயிரியல் உதவி பேராசிரியர் காயத்ரி உள்ளிட்ட வேளாண் அதிகாரிகள் கலந்து கொண்டு கடலூர் மாவட்டத்தில் செயல்படும் இயற்கை விவசாய குழுக்கள், பாரம்பரிய ரகங்கள், அரசின் புதிய திட்டங்கள், மண் வளம், மண் பரிசோதனை, பாரம்பரிய ரகங்கள் மதிப்பு கூட்டுதல், பாரம்பரிய தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி, விதை உற்பத்தி, விற்பனை வாய்ப்புகள், நுண்ணீர் பாசனத்தின் முக்கியத்துவம், பயிர் காப்பீடு செய்யும் வழிமுறைகள், இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்தும் முறைகள், கால்நடையில் பாரம்பரிய ரகங்கள் மற்றும் விற்பனை வாய்ப்புகள், வேளாண்மையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். 

 

அதனைத் தொடர்ந்து இயற்கை விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பாரம்பரிய ரகங்கள், சாகுபடி, விவசாயிகளின் தேவைகள், விற்பனை வாய்ப்புகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர். விழாவில் வைக்கப்பட்டிருந்த  கண்காட்சியில் கருப்பு கவுனி, சீரக சம்பா, கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, அடுக்கு நெல், யானை கொம்பன், மடுமுழுங்கி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களும், மூலிகை பொருட்கள், நாட்டு வகை காய்கறிகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

 

கருத்தரங்கில் ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள் பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை கண்டுகளித்ததுடன் பாரம்பரிய விதைகளை வாங்கியும், பாரம்பரிய முறையில் விளைவிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை உண்டும் மகிழ்ந்தனர். இதுபோன்ற பாரம்பரியம் சார்ந்த வேளாண் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு பகுதியிலும் நடத்தி,  தமிழக அரசு இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் இயந்திரங்களை, அந்தந்த பகுதிக்குட்பட்ட வட்டாரத்துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

 

வேளாண்துறை அதிகாரிகள் பாரம்பரிய வேளாண் கண்காட்சியை பார்வையிட்டு அதில் சிறப்பாக கண்காட்சி அமைத்திருந்த விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், திருமுட்டம், நெய்வேலி பகுதிகளில் இருந்து அட்மா திட்டத் தலைவர்கள்,  ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

முடிவில் வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.