Skip to main content

கரோனா விழிப்புணர்வு- கை கழுவ அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பு!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையைச் சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 

tn assembly health minister speech

அதன் தொடர்ச்சியாக பேரவையில் இன்று (19/03/2020) நடந்த விவாதத்தின் போது கரோனா வைரஸ் தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "கரோனா பாதித்த வடமாநில இளைஞருடன் தொடர்பில் இருந்த 10 பேரை தனிமைப்படுத்தியுள்ளோம். கரோனா பாதித்த நபருக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படும். 

tn assembly health minister speech

கரோனாவுக்கு சிகிச்சை தர தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தரமான ஆய்வகங்கள் ஏற்படுத்த தனியார் மருத்துவமனைகள் முன்வந்தால் மத்திய அரசின் அனுமதிக்கு பரிந்துரை செய்யப்படும். கரோனா சிகிச்சைக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வழிவகை செய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் முழுவதும் 32 பேர் மட்டுமே கரோனா சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
 

இதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் கை கழுவுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அழைப்பு விடுத்துள்ளார். #TN_Together_AainstCorona, #WashYourHands, #Iwashedmyhands என்ற ஹாஷ்டேக்குடன் பதிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்