Published on 01/10/2018 | Edited on 01/10/2018

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர். இந்த சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற உள்ளது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை இரவு டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திருநாவுக்கரசர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மு.க.ஸ்டாலின் தெளிவாக கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட 8 கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறோம். இதுதொடர்பாக விரைவில் ஸ்டாலினை சந்திக்க உள்ளேன் என்றார்.
இந்த நிலையில்தான் இன்று ஸ்டாலினை சந்திக்க உள்ளார் திருநாவுக்கரசர்.