Skip to main content

கால் போன போக்கில் சென்ற சிறுமி... ஐ.எம்.இ.ஐ எண் உதவியால் சிக்கிய மூவர்!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

Three trapped with the help of IMEI number

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது வீட்டில் கோபித்துக்கொண்டு கால்போன போக்கில் நடந்து சென்றுள்ளார். கீழ் ஆதனூர் என்ற ஊர் அருகே சிறுமி நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது ஆட்டோவை நிறுத்தி சிறுமியை கட்டாயப்படுத்தி ஆட்டோவில் ஏற்றியுள்ளார். அப்போது சிறுமி தன்னை திண்டிவனம் கொண்டுபோய் இறக்கி விடுமாறு கூறி உள்ளார். சரி உன்னை திண்டிவனத்தில் கட்டாயம் இறக்கி விடுகிறேன் என்று கூறிய ஆட்டோ டிரைவர் ஆட்டோவில் சிறுமியை ஏற்றிக்கொண்டு எங்கும் நிற்காமல் மதுராந்தகம் அழைத்துச் சென்றுள்ளார்.

 

இதனிடையே சிறுமியின் பெற்றோர் தங்களது மகள் கோபித்துக் கொண்டு விட்டு சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அவரது புகாரின்பேரில் மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமி வைத்திருந்த செல்போன் எண்ணை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த சிறுமியின் போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ எண்ணை போலீசார் மேலும் ஆய்வு செய்தனர.  சிறுமியின் செல்லில் வேறு ஒரு நபர் பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் செல்போன் மூலம் செங்கல்பட்டு அருகிலுள்ள ஆத்தூர் கிராமத்தில் 3 பேர் சிறுமியை அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

 

இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் அவரை அடைத்து வைத்த 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் திருக்கழுக்குன்றம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த போலி சாமியாரான தேவன் என்பவரது 32 வயது மகன் என்பதும் இவர் கடந்த 13ஆம் தேதி சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியதில் போலிச்சாமியார் எல்லப்பன் சிறுமியை கடத்திச்சென்று மதுராந்தகம் அருகில் உள்ள சிறு பேர் பாண்டி என்ற கிராமத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் பிரபு(33) வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. சிறுமியை போலீசார் தேடுவதை அறிந்து செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் புவனேஷ்வரி நகர் சின்னப்பன் அங்குள்ள ஒரு மாட்டுக்கொட்டகையில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

 

இதனை அடுத்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்ததற்காக போலி சாமியார் எல்லப்பன், அவருக்கு உடந்தையாக இருந்ததாக பிரபு, சின்ன பையன் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் கைது செய்து ஒன்பது பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியை கடத்த பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த போலி சாமியார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திண்டிவனம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்