Skip to main content

திருவள்ளுவர் தினத்தில் கள்ள சந்தையில் சரக்கு  விற்பனை!  

Published on 16/01/2019 | Edited on 16/01/2019
b

 

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் மற்றும் மதுபான விடுதிகளுக்கும் இன்று விடுமுறை அளித்துள்ளது அரசு.      ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் பகிரங்கமாகவே காவல் நிலையம் அருகே ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் அமோகமாகவே 100 ரூபாய்க்கு இருக்கக்கூடிய குவாட்டர்  மது பாட்டிலை 180 ரூபாய் மற்றும் 200 ரூபாய்க்கு  குடிமகன்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.   இதனால் குடிமக்களுக்கும் கள்ளச்சந்தையில் சரக்கு விற்பனை செய்யும்  ஆளும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து வருகிறது.

  

b


இதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி திண்டுக்கல் வத்தலகுண்டு வேடசந்தூர் நத்தம் உள்பட பல பகுதிகளிலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தும் கூட சில்லிங் மூலம் ஆளும் கட்சியினர் குடிமகன்களுக்கு சரக்கு விற்பனையை அமோகமாக விற்பனை செய்து வருகிறார்கள்.  இது போல் கடந்த மாதம் நிலக்கோட்டை தாலுகாவில் பள்ளபட்டி  அருகே விஷம் கலந்த மது விற்பனை செய்ததின் மூலம் அதை குடித்து இரண்டு குடிமகன்கள்  உயிர் இழந்த சம்பவம் பள்ளபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படி கள்ளசந்தையில் விஷ மது விற்ற 5 நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் காட்சிகள் கைது செய்யப்பட்டு இருந்த நிலையிலும் இன்று ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் அருகே கள்ளச் சந்தையில் சரக்கு படு ஜோராக விற்பனை செய்து கொண்டு இருந்தும்கூட காக்கிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்