Skip to main content

பாசத்தால் உயிரைவிட்ட தாய்; அதிர்ச்சியில் பலியான வடமாநிலத்தவர் 

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

vellore katpadi railway station incident

 

ஒரு விபத்தால் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்த சோகம் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் காஞ்சனா. கணவனை இழந்த இவருக்கு 25 வயதில் ஆனந்த் என்ற ஒரு மகன் உள்ளார். சமீபத்தில் திருச்சிக்கு சென்ற ஆனந்த பைக் விபத்தில் ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மிகுந்த மன வேதனையில் இருந்த காஞ்சனா யாரிடமும் எதுவும் பேசாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 

 

இந்த நிலையில் காஞ்சனா நேற்று காலை யாரிடமும் எதுவும் சொல்லாமல் காட்பாடி ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது அந்த நேரத்தில் பெங்களூருவில் இருந்து வந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். இதனைப்பார்த்து ரயிலில் இருந்த பயணிகளும், ரயில் நிலையத்தில் இருந்தவர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் காஞ்சனா ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதை நேரில் பார்த்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

 

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ராம்கிருபா(54) தனது குடும்பத்துடன் வேலூருக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், மீண்டும் தனது குடும்பத்துடன் மத்தியப்பிரதேசத்திற்கு செல்வதற்காக காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். இந்த நிலையில் தான் காஞ்சனா ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதை நேரில் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மூன்று சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இப்படி இருந்தா எப்படி ஓட்டுக்கேட்க முடியும்?” - கவுன்சிலரை லெஃப்ட் ரைட் வாங்கிய எம்.எல்.ஏ

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
MLA advised the councillors to do the panchayat work properly

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்ட அடுத்த வெட்டுவானம் பகுதியில் எம்.எல்.ஏ நந்தகுமார் இன்று (18.7.2024) திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைவருக்கும் குடிநீர் வழங்கும் அம்ரித் திட்டப் பணிகளில் தோண்டப்பட்ட குழிகளில் சரியான முறையில் ஒப்பந்ததாரர் சிமெண்ட் பேட்ச் ஒர்க் சரிவரச் செய்யாததால் பள்ளமாக இருந்தது.

உடனடியாக இதை அனைத்தையும் கொத்தி எடுத்து விட்டு மீண்டும் சிமெண்ட் சாலை தரமான முறையில் அமைக்க வேண்டும் எனவும் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் பணிகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியாது எனக் கவுன்சிலர்களைக் கடிந்து கொண்டார்.

தொடர்ந்து வெட்டுவானம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுமார் 43 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள மேம்பாலம் அமைக்கும் பணியினை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தரவேண்டும் என அதிகாரிகள் இடத்தில் அறிவுரை வழங்கினார்.

Next Story

“படித்து பட்டம் பெறுவதை விட பஞ்சர் கடை வைக்கலாம்” - பா.ஜ.க எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
BJP MLA's controversial speech in madhya pradesh

நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் ‘பிரதமர் சிறப்புக் கல்லூரி’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும் இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க எம்.எல் ஏ ஒருவர், மாணவர்களிடம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேசம் மாநிலம், குணா மாவட்டத்தில் இந்த புதிய கல்லூரியில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அந்த தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ பன்னாலால் ஷக்யா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாம் இன்று பிரதமர் சிறப்பு கல்லூரியைத் திறக்கிறோம். இந்தக் கல்லூரிப் பட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அதற்குப் பதிலாக, குறைந்த பட்சம் மோட்டார் சைக்கிளுக்கு பஞ்சர் பார்க்கும் கடையை வைத்தால் உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும்” என்று கூறினார். பா.ஜ.க எம்.எல்.ஏவின் இந்தச் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.