இந்தியாவில் உள்ள 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. கோவில் கருவறையில் ஆதிகேசவ பெருமாள் 22 அடி நீளத்தில் சயன நிலையில் கம்பீரமக படுத்தியிருப்பார். இந்த சிலை 16 ஆயிரத்து எட்டு சாளகிராமம் உள்ளடக்கிய கடுசர்க்கரை படிமம் என்கிற ழூலிகை கலவையால் ஆனது. மேலும் ஆதிகேசவ பெருமாளின் தலையில் தங்க கிரீடத்தில் விலை மதிக்க முடியாத வைர வைடூரிய கற்கள் பதிக்கப்பட்டியிருந்தது. மேலும் உடல் முதல் கால் பாதம் வரை தங்க கவசமும் அணிவிக்கபட்டியிருந்தது.
இங்கு இந்தியா முமுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இங்கு 24 மணி நேரமும் பூஜைகள் நடைபெறும். ஆதிகேசவ பெருமாளுக்கு பூஜை செய்யும் போற்றி தினமும் 7
முறை குளித்து விட்டு தான் பூஜை செய்வார். இந்த நிலையில் இந்த சிறப்பு மிக் கோவிலில் பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டியிருக்கும் நகைகள் கொஞ்சம், கொஞ்சமாக திருடப்பட்டு செல்வதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இது குமரி மாவட்டம் முமுவதும் பரபரப்பாக பேசபட்டது.
மேலும் கோவில் போற்றிகள் துணையுடன் தேவஸ்தானம் நிர்வாகிகளும் ஊழியர்களும் நகைகளை கொள்ளையடித்து வருவதாக 1989-ம் ஆண்டு உறுதியான தகவல்கள் வெளியானது. இது தமிழகம் முமுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து 1992-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து நடந்த சிபிசிஜடி விசாரணையடுத்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக கோவில் பூசாரிகளும் தேவஸ்தானம் ஊழியர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி ஆறரை கிலோ தங்க நகைகள் மற்றும் வைரங்கள் கொள்ளையடிக்குபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கோவில் தலைமை பூசாரியான கேசவன் போற்றி வழக்கு விசாரணைக்கு பயந்து மனைவி கிருஷ்ணம்பாளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் மனைவி உயிர் பிழைத்தார் அவரும் குற்றவாளி.
கடந்த 27 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் 10 பேர் இறந்து விட்டனர் ஒருவர் வழக்கில் இருந்து பிரித்தெடுக்கபட்டார். இதை தொடர்ந்து 23 பேர் மீது மட்டும் நடந்து வந்த வழக்கில் நேற்று நாகர்கோவில் கோர்ட் குற்றவாளிகளுக்கு தீர்ப்பளித்தது. இதில் 14 பேருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும் 9 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது.